பக்கம் எண் :

192

 

பாவி யென்றெனக் குணர்த்திய கருணையும் பாவநா சரைக்காட்டி
ஏவி யென்னையங் கவர்வயி னடத்திடு மிருந்திற மையுமெற்காய்
ஓய்வி லாதுபி தாவைமன் றாடலி லுற்றெழு பெருமூச்சுந்
தேவ ஆவியின் புனிதமாச் செயலுமென் சிந்தைவிட் டகலாவே. 6

     (பொ - ரை) நான் பாவியென்று எனக்கு உணர்த்தியருளிய
கருணையும், பாவநாசகராகிய இரட்சா பெருமானை எனக்குக் காட்டி
என்னைத் தூண்டி அவரிடம் நடத்திக்கொண்டுபோகும் பெரிய
திறமையும், எனக்காகப் பிதாவின்முன் ஓயாமல் மன்றாடுவதால்
உண்டாகும் பெருமூச்சும், தேவ ஆவியின் பரிசுத்தஞ்செய்தலாகிய
பெரிய கிரியைகளும் என் மனதைவிட்டு என்றும் நீங்கமாட்டா.

 
 

        வேறு. (திருவிருந்து.)

   
 

மாக வேந்தற்கு மானத பூசனை
ஓகை யோடளித் தொண்பொன்வள் ளத்துறு
பாகு குத்தப ரிசெனப் பத்தியாந்
தோகை யின்னன சொல்லுதன் மேயினாள். 7

     (பொ - ரை) பக்தியென்னும் பெண் தேவலோக அரசனாகிய
கடவுளைச் சந்தோஷத்துடன் மனதிலே பூசைசெய்து, பிரகாசமான
பொன் கிண்ணியினின்று சர்க்கரைப்பாகு சொரியுந் தன்மைபோல
(இரக்ஷணிய சரிதத்தைக் கிறிஸ்தியானுக்கு) பின்வருமாறு சொல்லத்
தொடங்கினான்.

 
 

கோட்ட மின்மனத் தீரிளங் கோமகன்
தீட்டு மானிடம் யாவையுந் தீச்சிறை
மீட்டு மேக்குயர் வீட்டுல கத்தினைக்
கூட்டு வானுற்ற வாதைகு றிக்கொளில். 8

     (பொ - ரை) மாசற்ற மனதுடையீர்! சிருஷ்டிக்கப்பட்டுள்ள
மனிதர்கள் எல்லோரையும் பாவமாகிய அக்கினிபோன்ற சிறையினின்று
விடுவித்து, மேலேயுள்ள பரம உலகத்தில் அவர்களைச் சேர்க்கும்
பொருட்டு, அரசனாகிய கடவுளது இளவரசிற்குரிய நம்பெருமான் பட்ட
வாதைகளை யோசித்தால் (அது பெரிதாகும்.)

 
 

மற்றை நாண்மனு மக்களி ரக்ஷணை
முற்று மென்றுமு னிவின்றி முற்படும்
அற்றை நாளிர வில்லடி யாரொடும்
உற்ற ருந்தினர் நல்விருந் தோர்மனை. 9

     (பொ - ரை) அடுத்த தினத்தில் மனிதர்களது இரட்சிப்பு
நிறைவேறவேண்டி (தானடையப்போகிற துன்பங்கட்காகக்)