பக்கம் எண் :

193

கோபங்கொள்ளாமல், (அவ்வாறு துன்பம் வருவதற்கு) முன்னிரவில்
தன் (பன்னிரண்டு) சீஷர்களுடன்கூட ஒர் வீட்டில் நல்ல விருந்தை
சாப்பிட்டார்.

 
 

மருந்தெ னத்தகு மந்திர வற்புத
விருந்த ருந்துமவ் வேளையில் வித்தகந்
திருந்து சிற்சில திவ்விய போதனை
பொருந்து மாறுபு கன்றனர் புண்ணியர்.      10

     (பொ - ரை) தேவாமிர்தம் என்று சொல்லத்தகும் அந்த
அற்புதமான விருந்தை சாப்பிடும் சமயத்தில், புண்ணிய புருஷனாகிய
நம்பெருமான் ஞானம் நிறைந்த சில நற்போதனைகளைக் கேட்பவர்
மனதிற் பதியும்படி சொன்னார்.

 
 

உந்து தண்ணளி யாலுல கத்திடைத்
தந்தை தன்னைவி டுத்ததுந் தாம்வரு
விந்தை யுந்திரு வுள்ளம்வி ழைந்திடும்
அந்த ரங்கம வனிக்க ளித்ததும்.            11

     (பொ - ரை) ஜெயதீசன் தம் இருதயத்தில் எழும்பிக்கொண்டிருக்கும்
கருணையால் இவ்வுலகத்திற்குத் தம்மை யனுப்பினதையும், தாம்
(அவதாரமெடுத்து) வந்த அற்புதத்தையும், கடவுளது மனதிலுள்ள
ஆலோசனையை பூலோகத்திற்கு வெளிப்படுத்தினதையும்,

 
 

விதிவி லக்கின்சு டரைவி கூம்புநோய்
மதிவி ளக்கிற்பொ ருத்திய மாட்சியுங்
கதிபு கத்துமெய் யன்பின்க னிதரூஉ
முதிரு மெய்விசு வாசத்தின் மொய்ம்பதும்.     12

     (பொ - ரை) இதைச் செய் இதைச் செய்யாதே என்னும் விதி
விலக்குப் பிரமாணமாகிய சுடரை ஆகாசத்தில் பொருந்தியிருக்கின்ற
சந்திர ஜோதியைப்போல ஏற்றிவைத்த மாட்சிமையையும், பரமகதிக்குக்
கொண்டு செலுத்தக்கூடிய உண்மையான அன்பாகிய கனிகளைத்
தருகின்ற (மரமாகிய.) மெய் விசுவாசத்தின் வலிமையையும்,

 
 

கால முற்றுங்க டவுள்க ருத்தினுக்
கேலு நற்கரு மங்களி யற்றிய
சீல மும்பரி விற்றெரி யச்சொலி
மேலும் விள்ளுவர் ஞானவி ரோசனன்.       13

     (பொ - ரை) ஞானசூரியனாம் நம்பெருமான கடவுளது
நோக்கத்தை அநுசரித்தே சதா காலமும் நற்கருமங்களைத் தாம்
செய்துவந்த சற்குணத்தையும் அன்பினாலே தெளிவாகச் சொல்லியபின்
வேறு விஷயங்களைப்பற்றியும் உரைக்கிறார்.