|
சருவ வல்லதி
ரித்துவ தற்பரத்
தொருவன் யானொரு மூவரொன் றாயுள
நிருவி கற்பநி லையைவி சுவசித்
தொருவு கிற்கிலி ரேலெமக் குள்ளுளீர். 14
|
(பொ
- ரை) 'எல்லாம் வல்ல கடவுளாகிய திரித்துவ மூர்த்திகளுள்
நான் ஒருவன். (பிதாவும் நானும் பரிசுத்த ஆவியாராகிய) மூவரும் ஒன்றாக
உள்ள வித்தியாசமற்ற தன்மையை நீங்கள் யாவரும் நம்பி என்னைவிட்டு
விலகாதிருப்பீராயின் என்னில் தரித்திருப்பீர்.'
|
தொள்ளை
மாநில மெங்குந்து ருவிநீர்
விள்ளு மின்சுவி சேஷத்தின் மெய்ம்மையைக்
கொள்ளு மாலுல கம்பகை கொள்ளினும்
வள்ள லாரருள் வாய்க்கும லங்கலீர். 15
|
(பொ
- ரை) 'பழமையான இப்பெரிய உலக முழுவதும் நீங்கள்
சுற்றித் திரிந்து சுவிசேஷ சத்தியத்தைப் பிரசங்கியுங்கள். உலகம்
அதனை யேற்றுக்கொள்ளும். அங்ஙனமின்றி உங்களைப் பகைத்தாலும்
பயப்படாதீர்கள், கடவுளது அருள் உங்களுக்குக் கிடைக்கும்.'
|
சொற்ற
வென்னுரை யுட்கொடு தூநெறி
பற்றி மெய்ம்மைப கர்ந்திடு சான்றிராய்
நிற்றி ரென்னிலந் நின்மல வீட்டைந்
துற்றெ னோடரு காசனத் தோங்குவீர். 16
|
(பொ
- ரை) 'நான் சொன்ன வார்த்தைகளை நீங்கள் மனதில்
கொண்டு சன்மாாக்க நெறியையடைந்து, சத்தியத்தைச் சொல்லும்
சாட்சியாக நீங்கள் நிலைபெறுவீர்களானால், பரிசுத்தமான அந்த பரம
வீட்டையடைந்து என் ஆசனத்தின் பக்கத்தில் வந்துசேர்ந்து என்னுடன்
விளங்குவீர்.'
|
எண்ட
ரும்பர லோகவி ராஜ்ஜியத்
துண்டு பற்பல தானமங் குற்றியான்
ஒண்ட லந்தெரிந் தும்பொருட் டன்பினீர்
கண்டு மீள்குவ னெஞ்சங்க லங்கன்மின். 17
|
(பொ
- ரை) 'அன்பர்காள்! மாட்சிமை தங்கிய வானுலகத்தில்
அநேக இடங்கள் உண்டு. நான் அங்கே போய் சிறந்த இடத்தை
உங்களுக்காக ஆய்த்தம் செய்துவிட்டுத் திரும்ப வருவேன்,
மனங்கலங்காதீர்.'
|