பக்கம் எண் :

196

     (பொ - ரை) 'நீங்கள் என் ஒப்பற்ற நாமத்தில் எதைக்
கேட்டாலும் என் பிதா நீங்கள் கேட்டதைத் தந்து, எந்நாளும்
உங்களைக் காப்பாற்றுவார்' என்று நம்பொருமான் இவ்வாறான
மாசற்ற வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கும் இரவு நேரத்தில்,

 
 

ஆத்து மத்தின ளவிலு பாதிகண்
மீத்தி ரண்டொரு மித்துவி ழுங்கனல்
நீத்த மென்னநெ ருங்குபு கைவரத்
தீர்த்த னாவிக லங்கித்தி கைத்ததே.         23

     (பொ - ரை) அவருடைய ஆத்துமாவில் அளவுகடந்த பாடுகள்
மேலே திரண்டு ஒன்றாகச் சேர்ந்து நெருப்பின் சுவாலை
மூடிக்கொள்வதுபோல அவரை நெருங்கிச் சூழ, பரிசுத்தமான
நம்பெருமானது ஆவி கலங்கித் திகைத்தது.

 
 

வேறு (யூதாஸின் வஞ்சகம்)

   
 

புரையிலாப் புண்ணிய புருஷ வுத்தமர்
தரையில்வாழ் நரருயக் கலக்கந் தாங்கியே
கரையிலாப் பவக்கடல் கடத்தி லாரெனில்
நிரையநித் தியந்தரு கலக்க நீங்குமோ.       24

     (பொ - ரை) குற்றமற்ற புண்ணிய புருஷோத்தமரான நம்பெருமான்
பூலோகத்தில் வாழும் மானிடர்கள் இரட்சிப்படையும்படி
மனவேதனையடைந்து, எல்லையில்லாப் பாவக்கடலைத் தாண்டும்படி
செய்யாவிட்டால், நரகத்தால் வரும் அழியாத வேதனை அவர்களைவிட்டு
நீங்குமோ?

 
 

இறைவரவ் விருந்தினுக் கிடைபஸ் காவெனும்
மறியுணு மடியரின் வதன நோக்கியீண்
டுறைதரு முங்களி லொருவ னேயெனைச்
செறுநர்கைப் படுத்துவ னென்றுஞ் செப்பினார். 25

     (பொ - ரை) அரசனாகிய நம்பெருமான் இவ்விருந்துக்கு ஒத்த
பஸ்கா பண்டிகையின் ஆட்டை யருந்தும் சீஷர்களது முகத்தைப் பார்த்து,
'இங்கேயிருக்கிற உங்களில் ஒருவனே என்னைப் பகைவர் கையில்
ஒப்புக்கொடுப்பான்' என்று சொன்னார்.

 
 

ஆங்கது கேட்டமெய் யடியர் யாவனித்
தீங்கினை நினைத்தன னென்னத் தேர்கிலார்
தாங்கருந் துக்கமுந் திகிலுந் தம்முளே
வீங்கிடத் தனித்தனி வினவி னாரரோ.        26