(பொ
- ரை) அங்கே இவ்வாறு சொல்லக்கேட்ட மெய்
அடியாராகிய சீஷர் தம்மில் யார் இத்தீங்கை நினைத்திருக்கிறான்
என்று அறியக்கூடாதவர்களாய், தாங்க முடியாத வருத்தமும் பயமும்
தங்களில் அதிகரிக்க, ஒருவரையொருவர் தனித்தனியாக விசாரித்தார்கள்.
|
ஈண்டுறுந்
துரோகியா ரெனக்கொ திப்புடன்
ஆண்டகை மடியரு கணைந்த வன்பனைத்
தூண்டினன் பேதுரு சமிக்கை தோன்றுற
வேண்டின னவனுமயார் விள்ளு கென்னவே. 27
|
(பொ
- ரை) பேதுரு என்னும் சீஷன், 'இங்குள்ளவர்களில்
அப்பேர்ப்பட்ட துரோகி யார்?' என்று நம்பெருமானது மார்பில் சாய்ந்து
கொண்டிருந்த அன்புள்ள சீஷனாகிய யோவானை மனவருத்தத்துடன்
சைகைகாட்டி கேட்டான். அது கண்ட யோவானும் 'அவன் யார்
சொல்லும்' என நம்பெருமானை வேண்டினான்.
|
அன்பருக்
காரமு தனைய வஞ்சொலார்
இன்புறுந் துணிக்கையொன் றெடுத்துத் தங்கையால்
வன்புறு மனத்தனுக் களித்து மற்றவன்
என்பதை நண்பனுக் கிகைத்துப் பின்னரும். 28
|
(பொ
- ரை) பக்தர்கட்குச் சிறந்த அமுதத்திற்கொப்பான
அழகிய வார்த்தைகளைப் பேசும் நம்பெருமான் (உண்போருக்கு)
இனிமையைத் தரக்கூடிய அப்பத்துண்டு ஒன்றைத் தம் கையால் எடுத்து,
கடினமான மனதையுடைய ஸ்காரியோத்து என்பவனுக்குக் கொடுத்து
(தன்னைக் காட்டுபவன்) அவன்தான் என்பதை அன்புள்ள சீஷனாகிய
யோவானுக்குச் சொல்லி மறுபடியும்,
|
என்னொடுங்
கலத்திற்கை யிடுகின் றோனெவன்
அன்னவ னேயெனை யளிப்பன் றெவ்வர்க்கு
முன்னவை மொழிந்தவா றெனக்கு மூள்வன
பின்னவற் குறுதுயர் பேசற் பாலதோ.
29
|
(பொ
- ரை) 'என்னுடன் பாத்திரத்தில் கையிடுகிறவனாகிய
அவனே என்னைப் பகைவரிடம் ஒப்புவிப்பான். ஆதிகாலத்தில்
என்னைப்பற்றி சொல்லியிருக்கிறவண்ணம் எனக்கு சம்பவிக்கும்.
இதற்குப்பின் அவனுக்கு வரும் துன்பம் நாம் பேசுந்தன்மையுடையதோ?'
|
பிறந்திடா
திருப்பனேற் பெரிய நன்மையென்
றறைந்தனர் பேதுரு வாதி யன்பர்க்கு
மறைந்துபுட் சிமிழ்க்கும்வேட் டுவனில் வஞ்சகம்
நிறைந்தவன் மற்றிவை நிகழுங் காலையில். 30
|
|