|
(பொ
- ரை) 'இவன் பிறந்திராவிட்டால் பெரிய நன்மையாக
இருக்கும்' என்று பேதுரு முதலான தொண்டர்களுக்குச் சொன்னார்.
ஒளிந்துகொண்டு பட்சிகளை வலைவைத்துப் பிடிக்கும் வேடனைக்
காட்டிலும் அதிக வஞ்சத்தையுடைய இவன் இவ்வாறு நடக்கும்
சமயத்தில்,
| |
அகத்தெழு
சாக்ஷியை யடக்கி மானத்தை
உகுத்துநன் மதியினை யொழித்து நன்றியைச்
செகுத்துவன் னெஞ்சொடு தியங்கி யான்கொனீர்
வகுத்துரைத் தவனென வாயிற் கேட்டனன். 31
|
(பொ
- ரை) உடனே யூதாஸ் மனதிலிருந்து புறப்படும்
மனச்சாட்சியை அடக்கி, வெட்கத்தை உதறிவிட்டு, நல்லறிவையும்
இழந்து, நன்றியை மறந்து, கடினமான மனதுடன் மயங்கி, (உம்மை
ஒருவன் காட்டிக்கொடுப்பான் என) 'நீர் பிரித்துச் சொன்னவன்
நான்தானா?' என்று வாயினால் கேட்டான்.
| |
உள்ளுவா
ருள்ளுவ துடனு ணர்ந்திடும்
வள்ளலார் திருமுன மிரும னத்தனாய்
விள்ளுவான் றுணிந்தமை யறிந்த மெய்ப்பரன்
கொள்ளுநீ யுரைத்தவை யென்னக் கூறலும். 32
|
(பொ
- ரை) நினைப்பார் நினைப்பனவற்றை உடன் உடனே
அறியும் எம்பிரான் சந்நிதானத்தில் இருமனமுடையவனாக அவ்வாறு
கேட்கத் துணிந்ததையறிந்த சத்தியமூர்த்தியானவர், 'நீ கேட்டது சரி'
யென்ற சொல்ல,
| |
நஞ்செனக்
கொடியவ னுளத்து நாடிய
வஞ்சகம் வெளிப்பட வைரக் கல்லினும்
நெஞ்சகங் கடினமாய் நிறுவ நேர்பழிக்
கஞ்சிடா னமலனை யகன்றிட் டானந்தோர். 33
|
(பொ
- ரை) கொடியவனுடைய மனதிலிருந்த வஞ்சகம்
விஷத்தைப்போல் வெளிப்படவே, அவன் மனம் வைரக்கல்லைவிடக்
கடினப் பட்டு அங்குண்டான நிந்தைக்குப் பயப்படாமல் பரிசுத்தமான
கடவுளை விட்டு (வெளியிலே) போய்விட்டான். ஐயையோ!
| |
எறிந்தவேன்
மெய்நுழைந் திருக்க வாண்டையென்
றறிந்துவால் குழைத்துவந் தணுகுங் குக்கலுஞ்
சிறந்தபே ரருளொடுஞ் செய்த நன்றியை
அறிந்திடா தகன்றனன் யார்கொ லாமிவன். 34
|
(பொ
- ரை) நாயுங்கூட தன் எஜமானன் தன்னைக் குத்தின
வேல் தன் தேகத்தினுள் இருக்கும்போதே, அவ்வாறு தன்னைக் குத்தினது
|