பக்கம் எண் :

201

     (பொ - ரை) அதைக் கேட்ட பேதுரு, 'நான் உமது பின்னே ஏன்
வரமாட்டேன். இன்று உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்' என்று
தன்னுடைய பெலத்தை நம்பிப்பேச, வானவர்களுக்கு அரசனாகிய
நம்பெருமான் அதைத் தடுத்துச் சொல்லுகிறார்:

 
 

நின்னுடை ஜீவனை நீக்கு வாய்கொலோ
என்னுடை நிமித்தமா யிடங்கொ டாமல்யான்
துன்னிய பசாசினைத் துரந்தென் றந்தையை
உன்விசு வாசநன் றுரக்க வேண்டினேன்.       43

     (பொ - ரை) 'உன் உயிரை எனக்காக விட்டுவிடுவாயோ?
என்னிமித்தமாக பிசாசுக்கு இடம் கொடாமல் உன்னை நெருக்கியுள்ள
சாத்தானைத்துரத்தி உன் விசுவாசம் நன்றாக உறுதிப்பட என் பிதாவிடம்
நான் ஜெபித்தேன்' என்றார்.

 
 

உரப்படும் பின்னர்நீ யுன்ச கோதரர்
திரப்படு மாறுசிந் தனைசெய் வாயென
நிரப்பினர் பேதுரு நிலைக்கப் பூமிசைப்
புரப்பது கருதிவந் தணைந்த புண்ணியர்.       44

     (பொ - ரை) ஆத்துமாக்களை ஈடேற்ற வெண்ணி இப்பூலோகத்திற்கு
அவதார மெடுத்துவந்த நம்பெருமான் அவனை நோக்கி: 'நீ பக்தியில்
உறுதிப்பட்டதன்பின் உன் சகோதரர் பக்தியில் ஸ்திரப்படுமாறு நீ
நினைப்பாய்' என பேதுருவின் விசுவாசம் இப்பூமியில் நிலைபெறச்
சொல்லி முடித்தார்.

 
 

கேட்டவன் றன்பலக் கேடு ணர்ந்திடான்
மீட்டுமும் முடன்சிறை மேவு வேன்றலை
நீட்டுவன் சாவிலு மெனத்தன் னேசத்தைக்
காட்டினன் வருவது கருது வாரெவர்.          45

     (பொ - ரை) இதைக் கேட்ட பேதுரு தன் பலவீனத்தையறியாமல்,
'உம்முடன் சிறைச்சாலைக்கும் வருவேன். மரணம் வந்தாலும் தலை
கொடுப்பேன்' என்று மறுபடியும் சொல்லி, அவர்பேரிலுள்ள அன்பை
வெளியிட்டான். இனி நடக்கப்போகிறவைகளை நினைக்கிறவர் யார்?

 
 

ஆவது கருதிய வமலன் பேதுரு
சேவலின் றிரவிலே தெருளக் கூவுமுன்
மூவிசை யெனைமறு தலிப்பை முற்றுநீ
மேவுறு மெய்ம்மையை விளம்பி னேனென்றார்.  46

     (பொ - ரை) இனி நடக்கவேண்டியவைகளை நினைத்தருளும்
நம்பெருமான்: 'பேதுருவே, இன்றிரவில் சேவல் தெளிவாகக் கூவுமுன் நீ