|
என் பிதாவின் இராஜ்ஜியமாகிய
மோட்சவீட்டிற்கு நீங்கள் வந்து சேருமட்டும்
இதை இனிமேல் நான் பானம்பண்ணுவதில்லை' என்றார்.
|
என்றுதிரு
வாய்மலர்ந்தன் புருவாக வெழுந்தருளி யேசு நாதர்
ஒன்றியதம் மடியரொடும் பாவிகளுக் காயிரங்கி யொருபே றான
தன்றிருமைந் தனைக்கொடுத்திவ் வளவாக வுலகிலன்பு சார்ந்த தேவை
நன்றுநினைத் தேத்தியொரு தோத்திரகீ தமுமிசையாய் நவிற்றினாரால். 50
|
(பொ
- ரை) அன்பே உருவாக அவதார மெடுத்தருளிய ஸ்ரீ
இயேசுபிரான் இவ்வாறு சொல்லி, பாவிகளுக்காக மனமிரங்கி தனக்கு ஒரே
பேறான அருமைக்குமாரனை அனுப்பி இவ்வளவாய் இவ்வுலகத்தில் அன்பு
கூர்ந்த கடவுனை அதிகம் நினைத்து, அவரைத் துதித்து, ஒரு தோத்திரப்
பாட்டை தன்னுடனிருந்த சீஷர்களோடு இனிமையாகப் பாடினார்.
|
பரசமய
விருளகலச் சுவிசேஷ விரிகிரணம் பரப்பி நின்ற
இரவியெனுந் திருச்சபையி னிலையாக வழங்கிவரு மிரண்டு ஞான
வரமிகுசாக்கிரமெந்தின் முன்னதுஞா னஸ்நானம்மற்றொன்றிந்தப்
பரமவிருந் தாநமது பரமகுரு வேயிவையேற் படுத்தி னாரே. 51
|
(பொ
- ரை) சுவிசேஷமென்னும் விரிந்த கதிரை, மற்றச் சமயங்களின்
இருள் நீங்கும்வண்ணம் (எப்பக்கமும்) பரம்பச்செய்யும் சூரியனுக்கு ஒப்பான
திருச்சபையில் ஸ்திரமாக வழங்கிவரும் ஞான வரம் நிறைந்த சாக்கிரமெந்து
இரண்டு. இதில் முந்தினது ஞானஸ்நானம், மற்றொன்று இந்தத் திருவிருந்தாக
நமது பரம குருவாகிய இரட்சா பெருமானே இவ்விரண்டையும் ஏற்படுத்தினார்.
|
முந்துறஞா
னஸ்நான மடைவர்திருச் சபைபுகுவோர் முறையினின்று
பந்தமணு காதபரா பரன்மதலை யெம்முடைய பாவந் தாங்கிச்
சிந்தினர்செங் குருதியுயிர் விடுத்தனரென் றுளநினைந்து
சிந்தையன்பால்
நைந்துருகி விசுவாசத் தூன்றிநிற்பர் நற்கருணை நயந்துட் கொள்ளில்
52
|
(பொ
- ரை) ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் (கிறிஸ்துவின்
மந்தையென்னும்) திருச்சபையில் முதலாவதாகச் சேருகிறவர்களாவார்கள். பாவப்
பற்றில்லாத பராபரனின் குமாரனாகிய நம்பெருமான் உலக வழக்கத்திற்கு
மாறாக எம்முடைய பாவத்தைச் சுமந்து சிவந்த இரத்தத்தைச் சிந்தினார்.
(சிலுவையில்) தன் உயிரையும் (என்னை இரட்சிக்கு) விட்டார்
|