|
என்று மனதில் தியானித்து
இருதயத்தில் உள்ள அன்பால் உள்ளங்கசிந்து
உருகி நற்கருணையை பயபக்தியுடன் உட்கொண்டால் பக்தியில் ஊன்றி
நிற்பார்கள்.
| |
வேறு
(பிரார்த்தனை)
|
| |
|
| |
ஒலிகட
லுலக மெல்லா முயர்பர கதியிற் சேர
மலிதரு கருணை யாலே மானிட வுருவந் தாங்கி
மெலியராய் வந்த மேசி யாவிவை விளம்பிப் பின்னர்
நலிவுறு மடியர்க் காகச் செபத்திலே நாட்டம் வைத்தார். 53
|
(பொ
- ரை) சப்திக்கிற கடலினால் சூழப்பட்ட உலகத்திலுள்ள
யாவரும் மேலேயுள்ள மோட்ச பதவியை அடையுமாறு நிறைந்த கருணை
யாலே மானிட ரூபமெடுத்து ஏழையாக வந்த மேசியாவாசிய நம்பெருமான்
இவ்வாறு சொல்லியபின், மனம் வருந்தும் சீஷர்களுக்காக ஜெபத்தில் தன்
மனதைச் செலுத்தினார்.
| |
வேறு
|
| |
|
| |
ஆதிமத்
யாந்த ரகிதநிஷ் களங்க
வநாதியை யருட்பெருங் கடலை
ஓதுதற் கரிய மூலதத் துவத்தை
யொப்பற வுயர்பரஞ் சுடரை
வேதநா யகனைத் தமினிரு விகற்பாய்
விளங்கிய விபுதர்தம பிரானைக்
காதன்மீ தூரச் சிந்தையு ணினைந்து
முதுமறை கனிந்தவாய் திறந்தார். 54
|
(பொ
- ரை) ஆதி மத்தியம் அந்தம் என்பவையில்லாதவராய்
களங்க மற்றவராய், அநாதியாகவுள்ளவராய், கருணா சமுத்திரனாய்
வர்ணிப்புக் கடங்காத மூல தத்துவமாய், தனக்குச் சமானமற்று உயரும்
பரஞ்சோதியாய், வேதத்திற்குத் தலைவனாய், தம்மில் வித்தியாசமற்றவராக
விளங்குபவனாய், அமரர்கட்குத் தலைவனாய் விளங்கும் கடவுளை அன்பு
மிகுதியாகும்படி மனதில் தியானித்து, பழமையான வேதத்தைப் போதித்த
வாயைத்திறந்து (பின்வருமாறு) ஜெபித்தார்.
மேற்காட்டியவை
தெய்வ லட்சணங்களிற் சில. இது முதல் எட்டுக்
கவிகளில் பிரார்த்தனை அடங்கியுள்ளது.
| |
தந்தையே
நேரம் வந்தது நீர்நுந்
தனையனுக் களித்தவ ரெவரும்
உய்ந்திட நித்ய ஜீவனை நல்கு
முரிமையை யருளினீ ருமையும்
|
|