பக்கம் எண் :

205

 

மைந்தனா மெனையு மறிந்துகொள் வதுவே
    மாசறு நித்திய ஜீவன்
எந்தையே முன்ன முமிலெனக் கிருந்த
    மகிமையை யீந்திட வேண்டும்.         55

     (பொ - ரை) பிதாவே, நேரம் வந்தது. நீர் உம்முடைய
குமாரனுக்குத் தந்தருளின யாவரும் பிழைக்குமாறு, அவர் நித்திய
ஜீவனைக் கொடுக்கும்பொட்டு அவருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்.
என் பிதாவே! ஆதியில் உம்மில் எனக்கிருந்த மகிமையை எனக்குக்
கொடுத்திடும். உம்மையும் உமது குமாரனாகிய என்னையும்
அறிந்துகொள்வதே மாசற்ற நித்திய ஜீவன்.

 
 

எனக்குள யாவு முமக்குமற் றுமக்குள்
    ளனவெனக் காதலி னிவர்தாம்
எனக்குநீ ரளித்தோ ராயினு முமக்கே
    யுரியவ ரிவரை யிவ் வுலகிற்
றனிக்கவிட் டும்பரல் வருகின்றேன் பரம
    தந்தையே யீங்கிவர் நமைப்போல்
இனிக்கலந் திருக்கத் திருவருட் டுணைநீ
    ரீந்திடப் பழிச்சுகின் றேனே.           56

     (பொ - ரை) 'எனக்குண்டானவைகளெல்லாம் உமக்கே உரியது.
உமக்குள்ளவைகள் என்னுடையவைகளானபடியால் இவர்களை நீரே
எனக்குக் கொடுத்திருந்தபோதிலும் இவர்கள் உம்முடையவர்களே.
ஆகையால் பரம பிதாவே! இவர்களை இந்த உலகில் தனிமையாக
விட்டு உம்மிடம் வருகிறேன். நாம் ஒன்றாக இருக்கிறதுபோல் இவர்களும்
இனிமேல் ஐக்கியமடைந்திருக்கும்படி நீர் திருவருள் துணையைத் தரும்படி
உம்மைத் துதித்துக் கேட்கின்றேனே.'

 
 

சொற்றமெய் வசனம் பிழையுறா வண்ணந்
    துன்மதி படைத்துளா னன்றி
மற்றிவர் தம்முள் ளொருவரு மிதய
    மருண்டுகே டடைந்திடா ராக
இற்றைஞான் றளவு முமதுநா மத்திற்
    காத்தனன் யான்பிரி தருணம்
உற்றதா லென்னி லிவர்மனத் துவகை
    யுதித்திட விவற்றையீண் டுரைத்தேன்       57

     (பொ - ரை) 'திருமறையில் கூறப்பட்டுள்ளவை பொய்யாகாமல்
கெடுதி நெஞ்சு படைத்த யூதாஸ் ஒருவனே தவிர, சீஷர்களில் ஒருவரும்
மனமயங்கிக் கெட்டுப்போகாமல் இதுவரை உமது நாமத்தினாலே
அவர்களைக் காத்துக்கொண்டேன். நானிவர்களை விட்டுப் பிரிந்துபோகும்