|
வேளை வந்திருக்கிறபடியால்
இவர்கள் மனதில் சந்தோஷம் உண்டாக
இவைகளை இங்கே உமக்குச் சொன்னேன்.'
| |
நலனுறு முமது
திவ்விய வசன
மிவர்க்கியா னல்கலி னெனைப்போல்
உலகிய லிகந்து நீத்தன ரதனா
லுவரிநீர்க் கடல்புடை சூழும்
நிலவிய லுடையார் மிகப்பகைக் கின்றார்
நெருங்குபொல் லாங்கினின் றென்றும்
விலகிமெய் நெறியில் வழுவுறா ரிவரைக்
காத்தருண் மிகத்தர வேண்டும். 58
|
(பொ
- ரை) 'நன்மை நிறைந்த உமது திவ்ய வசனங்களை
இவர்களுக்கு நான் போதித்தலால், இவர்களும் என்னைப்போல்
உலகத்தின் தன்மையை ஒழித்துவிட்டார்கள். ஆகையால் உப்பு நீர்
நிறைந்த கடலால் சூழப்பட்ட உலகத்தின் தன்மையையுடையவர்கள்
இவர்களை மிகவும் பகைக்கிறார்கள். இவர்களைச் சேர்வனவாகிய
தீங்குகளினின்று விலக்கி சத்திய நெறி தவறாது என்றைக்கும்
இவர்களைப் பாதுகாத்து கிருபையையும் அதிகமாகப் பொழியவேண்டும்.'
| |
முன்னமிவ்
வுலகி லென்னைநீர் விடுத்த
முறைமைபோல் யானுமீங் கிவரை
இந்நிலத் தனுப்பு கின்றன னதனா
லிவர்க்கும தரியமெய்ப் பொருள்கள்
மன்னுதெய் வீக முறும்பர மார்த்த
வசனத்தாற் பரிசுத்தம் வழங்க
என்னையே யுமக்குச் சமர்ப்பணஞ் செய்தே
னிரங்கியாண் டருளுக வெந்தாய். 59
|
(பொ
- ரை) 'ஆதியில் என்னை நீர் இவ்வுலகத்தில் அனுப்பிய
விதத்தைப்போல, நானும் இவர்களை இந்த உலகத்தில் அனுப்புகிறேன்.
ஆதலால் கிடைப்பதற்கரிய மெய்ப்பொருள்கள் நிலைத்துள்ள தெய்வத்
தன்மை பொருந்திய சத்திய வசனத்தைக்கொண்டு நீர் இவர்களைப்
பரிசுத்தப்படுத்தியருளும்படி என்னையே உமக்கு ஒப்புக்கொடுத்தேன்.
என் பிதாவே! மனமிரங்கி இவர்களைக் கடாக்ஷித்தருளும்.
| |
பேதமற்
றொன்றாய் நாமிருத் தலைப்போற்
பேசுமித் தொண்டர்வாய் மொழியாற்
பூதல மாந்த ரென்னைநீர் விடுத்த
புதுமையைப் புகரற வுணர்ந்து
|
|