| |
போதமுற்
றென்னின் மெய்விசு வாசம்
பொருந்திநம் முட்கலந் திருக்கத்
தாதையே யுமது கிருபையீந் திடற்காய்த்
தமியன்மன் றாடுகின் றேனே. 60
|
(பொ
- ரை) 'நாமிருவரும் வித்தியாசமில்லாமல்
ஒன்றாயிருப்பதைப் போல, இப்போது நான் உம்மிடம் பரிந்து பேசிவரும்
இவ்வடியார்களது வார்த்தையினால் இப்பூமியிலுள்ளோர் என்னை நீர்
இங்கனுப்பின புதுமையை களங்கமில்லாமலறிந்து ஞானமடைந்து என்னில்
மெய் விசுவாசம் பொருந்தி நம்மில் ஐக்கியப்பட்டிருக்க, பிதாவே! உமது
கிருபையை ஈந்தருளும்படி அடியேன் மன்றாடுகிறேன்.
| |
அகிலலோ
கங்க ளமைக்குமுன் னென்னி
லன்புகூர்ந் தையநீ ரளித்த
மகிமையை நீரெற் குதவிய விவர்கண்
மயக்கறக் கண்டுகண் களிப்புற்
றகமகிழ வெய்தற் கியானினி திருக்கு
மத்தலத் தென்னோடு மமர்ந்து
தகவுட னிருக்க வேண்டுமிவ் வருத்தி
தரித்திருக் கின்றதென் னுளத்தே. 61
|
(பொ
- ரை) 'எல்லா உலகங்களையும் நீர் படைக்குமுன் அப்பனே,
நீர் என்னிலன்புகூர்ந்து எனக்களித்த மகிமையை நீர் எனக்குத் தந்த
இவர்கள் சந்தேகப்படாமல் களிப்புடன் கண்டு ஆனந்தமடைய, நான்
சுகமாக இருக்குமிடத்திலேயே இவர்களும் என்னுடன் சேர்ந்து
உரிமையுடனிருக்கவேண்டும் எனும் ஆசை என் மனதிலிருக்கிறது.'
| |
வையக மறியா
தும்மையா னறிவன்
மற்றிவர் தாமுமீங் கென்னை
ஐயநீர் வரவிட் டதையுநன் கறிந்தா
ராதலி னரியவும் மன்பு
மெய்யுற வென்னில் விளங்குதல் போல
விவருளும் விளங்குக வென்று
தெய்வமாக் குமரன் வெளிப்படை யாக
ஜெபித்தனர் சிந்தனை யுருகி. 62
|
(பொ
- ரை) 'அய்யனே, உலகம் உம்மையறியவில்லை. நான்
உம்மை அறிந்திருக்கிறேன். நீர் என்னை யனுப்பினதை இவர்களும்
நன்றாய் அறிந்திருக்கிறார்கள். ஆகையால் விசேஷித்த உமது அன்பு
உண்மையாகவே என்னில் விளங்குவதுபோல இவர்களிடத்தும்
விளங்கவேண்டும்' என்று தேவனின் சிறந்த குமாரனான நம்பெருமான்
மனதுருக்கத்துடன் பகிரங்கமாகப் பிரார்த்தித்தார்.
|