பக்கம் எண் :

209

 

நெட்டு யிர்ப்புவிசை மூட்டி யுன்னதநி லத்து லாவுபரி சுத்தருஞ்
சிட்டருந்தொழுபி ரானிருஞ்செவிதொ ளைத்த ருட்டிருவு ளக்கடத்
துட்ட தும்பிநிறை கருணை மாநறவு குக்க வெய்துமகி ழோங்கவம்
மட்ட ருந்தியன வரத வின்பமெனு மாண்க ளிப்பினிடை வைகுவார். 66

     (பொ - ரை) பெருமூச்சாகிய வேகத்தைச் சேர்த்து, வானுலகத்தில்
வசிக்கும் நீதிமான்களும் அடியார்களும் தொழும் கடவுளது சிறந்த
செவிகளிரண்டையும் துளைத்து, அருள்நிறைந்த திருவுள்ளமாகிய
குடந்தினுன்ளே வழிந்து பொங்கித் ததும்புகின்ற கருணையென்னும்
சிறந்ததேன் வடியும்படி ஜெபமாகிய அம்பால் எய்து சந்தோஷமுண்டாக
அத்தேனையுண்டு, என்றைக்கும் இன்பமெனும் மாட்சிமைபொருந்திய
ஆனந்தத்தில் நிலைபெறுவர்.

 
 

           (பிரார்த்தனையென்பது யாது)

   
 

அழிம்ப னேவுகன லஸ்தி ரங்களைய கற்று கேடகமெவ் வுலகமுந்
தொழும்ப ராபரன்வி ரும்பு கின்றபலி துய்ய ஜீவநதி நீர்தருஞ்
செழுங்கு டம்பரம நாய கன்றிருமு னஞ்செல் தூதுசெய்ப வங்களால்
அழுங்கு கின்றவித யத்துணின் றெழுநல்லாவி தந்தஜெப மாமரோ.

     (பொ - ரை) செய்கிற பாபத்தால் வருந்தும் இருதயத்தினின்று
பரிசுத்த ஆவியினருளால் புறப்படும் ஜெபம், சாத்தான் எய்யும் அக்கினி
யாஸ்திரங்களை யெல்லாம் தடுக்கிற கேடகம், உலகமெல்லாம் வணங்குகிற
ஈசன் விரும்பும் பலி, பரிசுத்தமான ஜீவநதியின் நீரைக்கொடுக்கும் சிறந்த
குடம் கடவுள்முன் செல்லும் தூது.

 
 

             (இரக்ஷா பெருமானின் மகிமை)

   
 

ஆன்ம ரக்ஷைதனை நீவி ழைந்தனைகொல் கேள்பி தாவொடரு ளாளரிம்
மானு வேலரையு மறிதி யென்றுநசி யாத ஜீவநிலை மருவுவாய்
ஞான தேசிகன வின்ற வாய்மையிஃ தன்றி வேறுவழி நாடுதல்
கான லம்புனலெ னத்து ணிந்தடவி யோடி யெய்ப்பதுக டுக்குமால்.

     (பொ - ரை) ஆத்ம இரட்சிப்பை நீ விரும்புகிறாய்போலும். நான்
சொல்வதைக் கேள். ஜெகதீசனுடன் கிருபைபெற்ற இம்மானுவேலாகிய ஸ்ரீ
இயேசுபெருமானைத் தெரிந்துகொள். அப்பொழுது என்றும் அழியாத
நித்ய ஜீவ பதவியை யடைவாய். ஞான குரு உபதேசித்த சத்தியம் இது.
இதுவன்றி வேறு வழியை நாடுதல் வெய்யலின் உக்கிரத்தை தூரத்திலிருந்து
பார்த்து அது நீரோடையென்று நினைத்து வீணாகக் காட்டிலோடிக்
களைத்துப்போவதை யொக்கும்.