| |
முத்தி
வீடுபெற நித்தமானவொரு முத்த னைப்பரவு முத்தம
பத்தி யொன்றமையு மென்ப ரண்ணல்பரி சுத்த நீதியது பான்மையை
உய்த்து ணர்ந்தறிவு றாத மாந்தரிஃ தென்னை யாழிநடு வுற்றுழன்
றெய்த்த வந்தகன டுத்த நற்புணைவி டுத்தி ருங்கரையி றுப்பனோ.
|
(பொ
- ரை) கடவுளது பரிசுத்த நீதியின் தன்மை
ஆராய்ந்துணர்ந்து அறியாத மானிடர் மோட்சமடைய ஒப்பற்ற நித்திய
கடவுளை துதிக்கும் சிறந்த பக்தியொன்றே போதுமென்பார்கள்.
சமுத்திரத்தின் நடுவில் கிடந்து தத்தளித்து வருந்தும் குருடன் தன்
சமீபத்திலுள்ள நல்ல மிதப்புக்கட்டையை விட்டுவிட்டுத் தானாக
அப்பெரிய கரையேறுவானோ! இது என்ன ஆச்சரியம்!
| |
நாச
மேதருபொ லாத பாதகந யந்தி யற்றியப சாசன்யான்
ஈச னோபவந ராத்து மங்களையெ ரிக்கு மங்கியினி யென்செய்கேன்
ஏசு வேயெனது பாவ நாசருயி ரீந்த வள்ளலிவ ரென்றறிந்
தாசை யோடுவிசு வாசி யாரைநர காக்கி னிப்புழுவ யின்றிடும். 70
|
(பொ
- ரை) 'நானோ அழிவையேயுண்டுபண்ணக்கூடிய பொல்லாத
பாவத்தை விரும்பிச்செய்த பசாசன். ஈசனோ பாவ மனிதர்களை எரிக்கும்
அக்கினி. ஆகையால் நான் என்ன செய்வேன். ஸ்ரீ இயேசுபெருமானே
என் பாவத்தை நீக்கினவர். எனக்காக உயிரைக்கொடுத்த வள்ளல் இவரே'
என்று அறிந்து ஆசையோடு அவரை விசுவாசியாதவர்களை நரகாத்தினிப்
புழு வதைக்கும்.
| |
எவன்ற
னைக்கொடிய பாவியென் றுளமிகக்க சந்து துயரெய்துவான்
எவன்ற னக்குவரு தேவ கோபழவ லஞ்சி யோடவகை யெண்ணுவான்
எவன்ற னக்கழிவிலாத முத்திநல மெய்து மிச்சையதி யைந்துளான்
அவன்கி றிஸ்துவில்மெய் யன்பு கூர்ந்துவிசு வாசம் வைத்திடில
டுக்குமே.
71
|
(பொ
- ரை) எவன் தன்னைக் கொடிய பாவியென்று மிக
உள்ளங்கசத்து வருத்தத்துடன் துக்கப்படுகிறானோ, எவன் பாபத்தினால்
தன் மேல் வரும் தேவகோபமாகிய அக்கினிக்குப் பயந்து ஓடும்
வகையைத் தேடுகிறானோ, எவன் அழியாத மோட்சத்தின்
மேன்மையையுடையும் படியான விருப்பத்தை
அதிகமுடையவனாயிருக்கிறானோ அவன் ஸ்ரீ கிறிஸ்து பெருமானில்
மெய்யாக அன்புகூர்ந்து அவர்பேரில் விசுவாசம் வைத்தால் முத்தி
சித்திக்கும்.
| |
நாயி
னுங்கடைய பாவி யேனையெரி நரக வாயிலு நடுக்குறும் ருங்
பேய்கொ டுங்கையிலு நின்றி ழுத்தழிவில் பேற ளித்தபெரு மான
தாயி னுஞ்சதம டங்கு நேயமுறு தற்ப ரன்சரண மன்றியென்
வாய்ம றந்துதுதி யாது சென்னியும்வ ணங்கி டாதிறுதி வரினுமே.
|
|