(பொ
- ரை) மோசம் வருமுன்னர் தங்களைக்
காத்துக்கொள்ளாதவருக்கு அவரது வாழ்க்கை எவ்வளவினவாயினும்
நெருப்புப்பட்ட வைக்கோல் துரும்புபோல் கெடும் என்று சொல்லுவார்.
துன்பம் வந்து வருத்து முன்னர் அதற்கு விலகியோடி அடைக்கல
ஸ்தானமாகிய பரமராஜனது சந்நிதானத்தையடைந்தால் நித்திய ஜீவனைப்
பெறுதல் நிச்சயம்.
|
ஈண்டுநா
னுரைத்த மாற்றம் யாவுமிப் புத்த கத்த
தாண்டகை யருளி னாலே யடுத்ததென் கரத்து முன்னம்
காண்டகு மிதனை நீவிர் கருத்துற வரசித் துய்மின்
வேண்டுமேற் றருவல் ராஜ விளம்பரம் வெறுத் திடாதீர். 37
|
(பொ
- ரை) இப்பொழுது நான் உரைத்தவை யாவும் இப்புதத்தில்
உள்ளன. இது தேவ கடாட்சத்தினாலே என் கையில்வந்து சேர்ந்தது.
முதலாவதாகக் காணத்தக்க இதனை நீங்கள் மனதில் பதியத்தக்கதாக
வாசித்து உய்யுங்கள். உங்களுக்கு விருப்பமானால் தருவேன். ராஜ
விளம்பரத்தை வெறுத்திடாதேயுங்கள்.
|
ஆவது
கருது வீரே லரைக்கண முந்தா ழாது
தீவா விருந்த நாச தேசத்தை யொருவி யின்னே
ஜீவனே யென்று கூவித் தீவிரித் தோடல் வேண்டும்
சாவது துணிந் தீராயிற் றங்குமித் தேயத் தென்றான். 38
|
(பொ
- ரை) நடக்கவேண்டுவதை ஆலோசிப்பீராயின்
அரைக்ஷணமும் தாமதியாமல் தேவகோபாக்கினிக்கு இடமாகிய
நாசதேசத்தைவிட்டு நீங்கி இப்பொழுதே ஜீவனே என்று கூவிக்கொண்டு
தீவிரமாக ஒடல் வேண்டும். சாவதற்குத் துணிந்தீராயின் இத்தேசத்தில்
தங்கும் என்றான்.
|
இந்தவா
றுரைத்த வெல்லா மிருஞ்சிலை மீது தாக்கும்
பந்தென லாய தன்றிப் பாமரர் பழுது மல்குஞ்
சிந்தையு ணிலையா தாகச் சினந்தவ மதிக்க லுற்றார்
பந்தமே கொளுத்தி னாலும் பயனுண்டேர குருடர்க் கம்மா. 39
|
(பொ
- ரை) இவ்விதமாக இவனுரைத்தவை யெல்லாம் பெரிய
கல்லின்மேல் அடிக்கப்பட்ட பந்தைப்போல் ஆனதேயல்லாமல் அந்தப்
பாமர ஜனங்களுடைய குற்றம்நிறைந்த சிந்தையுள் நிலைகொள்ளாதனவாக
அவர்கள் கோபங்கொண்டு அவனை அவமதித்தனர், பந்தத்தைக்
கொளுத்தினாலும் குருடருக்கு அதினால் பயனுண்டோ?
|
என்னைப்போற்
பரம ஞானி யில்லையென் றெமை யிகழ்ந்த
உன்னைப்போற் பித்த னிந்த வுலகத்தி லில்லை யென்பார்
பொன்னைத்தான் மாத ரைத்தான் பூவைத்தான் புறக்க ணித்தாற்
பின்னைத்தா னெய்து மின்பம் பிறிதுண்டோ பேசு கென்பார். 40
|
|