பக்கம் எண் :

23

     (பொ - ரை) என்னைப்போல் பரமஞானி இல்லையென்று எங்களை
இகழ்ந்த உன்னைப்போன்ற பித்தன் இவ்வுலகத்தில் ஒருவனுமில்லை என்று
சிலர் கூறுவார். பொன்னையும் பெண்ணையும் மண்ணையும்
புறக்கணித்துவிட்டால் பின்பு அடையக்கூடிய இன்பம் வேறே என்ன
இருக்கின்றது சொல்லுக என்று வேறுசிலர் கூறுவார்.

 
   

பதறிவாய் குழறி நீசொல் பழங்கதை தனைமுன் சில்லோர்
கதறினார் தெருக்க டோறுங் கதித்தெழுந் துருத்தி யாங்கள்
சிதறிட வடித்தோ மென்பார் செவிகொடா திவன்வீண் பேச்சை
உதறிவிட் டேகு வோநம் முறையுளை நாடி யென்பார். 41

     (பொ - ரை) நீ வாய்பதறி நாக்குளறிச் சொல்லுகின்ற
பழங்கதைகளை முன்னே சிலர் தெருக்கள்தோறும் கதறினார். நாங்கள்
விரைவாய் எழுந்து கோபங்கொண்டு அவர்கள் சிதறும்வண்ணம்
அடித்தோம் என்று சிலர் சொல்லுவார். வேறு சிலர் இவனுக்குச்
செவிகொடாது இவனுடைய வீணான பேச்சை உதறிவிட்டு நமதுவீட்டை
நாடிச் செல்லுவோம் என்பார்.

   

ஜீவசா க்ஷியரைக் கொன்று சேமித்தோ மென்று நம்மேல்
தாவரும் பழியைச் சாட்டித் தனைச்சுத்த னாகக் காட்டும்
பாவகா ரியைப்போல் யாரே பாதக ரென்பார் மேலைத்
தீவரும் வருமென் றெம்மைத் திகைப்பிப்பா னிவனோ
                                        வென்பார். 42

     (பொ - ரை) ஜீவசாக்ஷியரான தீர்க்கதரிசிகளைக் கொன்று
அடக்கஞ் செய்தோமென்று நம்மேல் கடிக்க ஒண்ணாத பழியைச்சாட்டித்
தன்னைப் பரிசுத்தவானாகக் காட்டும் பாவியாகிய இவனைப்போல் பாதகர்
வேறு யார் என்று சிலர் கூறுவர். இனிமேல் அக்கினி வரும் வருமென்று
எம்மைத் திகைக்கச் செய்கிறவன் இவன்தானோ என்பார் சிலர்.

   

சேய்கொண்ட மனையா ளுற்ற சினேகரை வெறுப்பா னேதோ
பேய்கொண்டா னென்ப ரேது பிறிதிலைப் பித்த மிக்கு
நோய்கொண்ட கோல மென்பார் நுனித்திடு மதியற் றின்ன
வாய்கொண்ட மட்டும் பேசி வாயடி யடித்தார் மன்னோ. 43

     (பொ - ரை) பெற்றபிள்ளை கொண்டமனைவி உற்ற சிநேகிதர்
ஆகிய இவர்களை வெறுக்கின்ற இவன் ஏதோ
பேய்கொண்டிருக்கின்றான் என்று சிலர் கூறுவார். வேறுசிலர்
இதற்குக்காரணம் வேறொன்றுமில்லை, பித்தம்மேலிட்டு நோய்கொண்ட
கோலமே இஃது என்பார். கூரிய புத்தியற்று இப்படிப்பட்டவைகளை
வாய்கொண்டமட்டும் பேசி இவர்கள் வாயடி அடித்தனர்.

 
   

கண்ணினை கலுழி காலக் கணவனுக் குளம ருடசி
நண்ணிய திணியென் செய்கோ நானெனக் கவன்று ணைந்தாள்
நுண்ணறி வுடைய நீரார் நூலொடு பழகித் தேராப்
பெண்ணறி வென்ப தெல்லாம் பேதைமை யுடைத்தா மன்றே. 44