|
வித்தக
வாத்தும விசாரி யிவ்வணம்
தத்துற லடைந்துயிர் தன்னை நாடியிங்
கெய்த்திடு முடலென வினைந்து சில்பகல்
மத்தரிற் கழித்தன னாண்டொர் வைகல்வாய். 1
|
(பொழிப்புரை)
ஞானமுள்ள ஆத்துமவிசாரியானவன்
இவ்வண்ணமாகச் சஞ்சலமடைந்து நித்திய ஜீவனை நாடி இங்கே
களைப்புற்றசரீரம் என்று சொல்லும்வண்ணம் சிலநாள்
பயித்தியகாரனைப்போல் கழித்தான். அவ்விடம் ஒரு நாளில்,
|
தண்ணளி
தயங்கிய முகத்துத் தாமரைக்
கண்ணிணை மல்கிய கருணை காட்டிட
உண்ணிறை யன்புமிக் கொழுகிற் றென்னவே
வண்ணவான் மொழிச்சுவை யமிர்து வார்ந்துக. 2
|
(பொ
- ரை) குளிர்ச்சிபொருந்திய கிருபை விளங்கின
முகத்தினிடத்தே தாமரை மலர்போல் அழகிய இரண்டு கண்களும்
நிறைந்த கருணையைக்காட்டிட, இருதயத்தில் நிறைந்த அன்பானது
பொங்கி வழிந்து ஒழுகிற்று என்னும்படி அழகிய மொழிச்சுவையாகிய
அமிர்தம் வடிந்து சொரிய,
|
எண்ணருந்
துயர்க்கெலா மிறுதி காட்டுமெய்ப்
புண்ணிய முருக்கொடு பொலிந்தி லங்கிய
வண்ணமென் றுணர்வுளார் மனங்க ளிப்புற
நண்ணின நிருஞ்சுவி சேஷ நாமத்தன். 3
|
(பொ
- ரை) எண்ணுதற்கரிய துயரங்களுக்கெல்லாம் அழிவைச்
செய்யக்கூடிய மெய்ப்புண்ணியமே ஒருருவெடுத்து மிகவும் விளங்கிய
வடிவம் இதுவோவென்று உணர்வுள்ளவரெவரும் மனமகிழ, சுவிசேஷகன்
என்னும் பெரிய நாமத்தையுடையவன் அங்கு வந்து சேர்ந்தான்.
|
உருகிமெய்
விசாரியை யுற்று நோக்கிநின்
தருகணைந் தியாரைநீ யவலிக் கின்றனை
பெருகுமித் துயருனக் குற்ற பெற்றியென்
திருகலில் சிந்தையாய் செப்பு கென்றனன். 4
|
|