(பொ
- ரை) அவன்மனம் இளகி உண்மையான ஆத்ம
வசாரியை உற்றுநோக்கிச் சற்றுநின்று அருகிற்சென்று நீ யார்! ஏன்
வருந்துகின்றாய்? பெருகிக்கொண்டிருக்கின்ற இத்துயரமானது
உன்னிடத்துவந்த தன்மையென்ன? மாறுபாடிலாத
சிந்தையையுடையவனே, இவற்றை எனக்குச் சொல்லுக, என்றான்.
|
ஐயகேள்
நாசதே சத்த னாங்கமர்
வெய்யரில் வெய்யன்யான் வெகுளித் தீவிழுந்
தொய்யென விவணெலா மொருங்க விந்தபின்
மெய்யுற வருநடுத் தீர்வை வேந்தனால். 5
|
(பொ
- ரை) ஐயனே கேள்! நான் நாசதேசத்தி லிருக்கின்றவன்.
அங்கே சஞ்சரிக்கின்ற கொடியர் யாவருள்ளும் கொடியவன் யான்.
கடவுளுடைய கோபாக்கினியானது விழுந்து இவ்விடமெல்லாம் மெதுவாக
ஒருங்கு அவிந்தபிறகு பரலோக ராஜனால் நியாயத்தீர்ப்பு மெய்யாகவே
வரும்.
|
ஆயிடைக்
கருணைவேந் தாணை மீறிய
தீயரைத் தீச்சிறைப் படுத்தல் திண்ணமென்
றேயுமிச் சுருதிநூ லியம்பு கின்றதை
ஆயவித் துயர்க்கட லமிழ்ந்தி னேனரோ. 6
|
(பொ
- ரை) அவ்விடத்தில், கருணைவேந்தனானவர் தமது
ஆணையை மீறிய தீயவர்களை அக்கினி நரகத்துக்குள தள்ளுதல்
திண்ணமென்று பொருத்தமுடைய இச்சுருதிநூல் இயம்புகின்றதை
ஆராய்தலினால் இந்தத் துயரக்கடலுள் அமிழ்ந்தினேன்.
|
நன்றிகொன்
றிறைவனை மறந்து நாடொறும்
புன்றொழில் புரிந்துவீண் பொழுது போக்கிய
வன்றலைப் புலையனேன் மருவு தண்டனைக்
கின்றுநின் றிரங்குவ தியாவ தாங்கொலோ. 7
|
(பொ
- ரை) நன்றித் துரேரகஞ்செய்து இறைவனை மறந்து
நாடோறும் இழிந்து காரியங்களையே செய்து வீண்பொழுது போக்கிய
கொடிய புலையனாகிய நான் வருகின்ற தண்டனைக்கு எதிர்நின்று
இன்றைக்கு மனஸ்தாபப்படுகின்றது என்ன காரணம்பற்றியோ?
|
சாகவு
மனமிலைத் தண்டனைக் கெதிர்
போகவுந் துணிவிலைப் புறத்து ளாரைப்போல்
ஏகவும் புகலிலை யீடு செய்யவோர்
பாகமும் பலமிலைப் பதைக்கின் றேனென்றான். 8
|
|