பக்கம் எண் :

268

  சிந்தை தேருந்தி ருத்தகு தெய்விக
மைந்த னோர்ந்தும னங்கலங் காதிர்நீர்
எந்த வாவியும் யானுறு மானவ
விந்தை யாக்கைப டைத்தில மெய்ம்மையால்.

470
   
  பாரு மின்பரி சித்தென்ப தாதியை
ஒரு முன்னுரை யானன்றி யுண்மைவே
றாரு மில்லர்மற் றையுற லீரெனாத்
தேரு மாறுதெ ருட்டினர் சிந்தனை.
471
   
  மேலு மேலும்ப லமுறை வித்தகக்
கோலங் காட்டிக்கு ரவர்க்குக் கோதறு
சீல மல்கத்தெ ரித்தனர் செம்பொருள்
ஞால மீதொரு மண்டல நாடியே.
472
   
  ஆதி மெய்யடி யார்திறத் தன்றியும்
பாதி யாயிர வர்க்கொரு பக்கலிற்
பூத லத்திலு யிர்த்தெழு புண்ணிய
நாதன் சேவைய ளித்தனர் நன்குற.
473
   
 

இத்தி றங்கிறிஸ் தியேசுவி னீறிலா
மெய்த்த வத்திரு மேனிவி ளங்கலிற்
சித்த சஞ்சல நீங்கித்தி கழ்ந்தனர்
சுத்த மெய்விசு வாசத்திற் றோமிலார்.

474
   
  அஞ்சி நெஞ்சம ழுங்கிய யர்ந்துவீழ்ந்
துஞ்ச காவல ரோடியு லப்பிலான்
எஞ்சு றாதவெ ழுச்சியும் யாவையும்
வஞ்ச கக்குர வர்க்குவ குத்தனர்.
475
   
  பங்க முற்றப திதர்ப லர்குழீஇச்
சங்க முற்றுநந் தாபத ரேகரந்
தங்கம் வௌவிய கன்றன ரென்னவவ்
வெங்க ணார்க்குவெ றுக்கையை வீசினார்.
476
   
  களியர் பொய்ப்படு கட்டுரை யோபுவி
தெளியுந் தெய்விக மெய்ம்மைசி தைத்திடும்
அளிய புன்மதி யாதித ருக்கனார்
ஒளிபு தைந்திடு மோவிர லொன்றிலே.
477