பக்கம் எண் :

269

  மன்ன னஞ்சிவ றிதுள மாழ்கினன்
ஒன்ன லார்நெஞ்சு ரங்கிழி பட்டனர்
பன்ன லாந்தர மன்றுவெம் பாழ்மதி
துன்னி யோரெவ ருந்துணுக் குற்றனர்.

478
   
  பத்தர் யாரும்ப வித்திர சிந்தையின்
உத்த மவிசு வாசத்து ரத்தலின்
மத்தர் வாயடை பட்டும றங்கிளர்
சித்த மாழ்கிய டங்கிய செவ்விவாய்.
479
   
                      வேறு
   
  உம்பர் நாயக னுயிர்த்தெழுந் தருளிய வுண்மை
இம்பர் மெய்ப்படுத் தீரிரு பதுதினத் திறுதி
கொம்பி றாலிழிந் தொழுகொலி வாசலங் குறுகி
நம்பு தொண்டர்க்கு வேதியர்க் கிவையிவை நவிலும்.
480
   
  நண்பு ளீருல கெங்கணு நரசமு ஹங்கட்
கெண்பெ றுஞ்சுவி சேஷத்தை யியம்புமி னிதயக்
கண்ப டைத்தவன் கதிநலம் பெறுகுவன் காணும்
பண்பி லாதவ னாக்கினைத் தீர்ப்பினுட் படுவான்.
481
   
  கண்டு கேட்டமெய்ச் சான்றுநீர் கருதிலென் றந்தை
விண்ட வாறினி யருட்பலம் விண்டலத் திழிந்து
மண்ட லத்துமை மருவுமட் டெருசலே மருவித்
தொண்ட ரீர்மலங் காதவண் டரித்திருந் துன்னி.
482
   
  ஒன்றி நும்முட ரிருப்பன்யா னுலகமுள் ளளவும்
என்று வாய்மையி னிலகுசெவ் வாய்மலர்ந் தியம்பி
நின்றெ ழிற்றிருக் கரங்களை வானுற நிமிர்த்தி நன்று
மங்கல விடையரு ளாசியு நவின்றார்.
483
   
  ஆசி மங்கள சாதன மருளிய வமையம்
மாசி லாவருண் முகிலையோர் மழைமுகில் வளைப்பத்
தேசு மல்கிய திருவுருக் காண்கிலார் சீடர்
மூசு பைம்புயல் விசும்புற முடுகுதல் கண்டார்.
484
   
  மிக்க பேரதி சயத்தொடு மேலுற நோக்கித்
தொக்கு நின்றவே தியர்மருங் கோரிரு தூதர்
புக்கிவ் வாண்டகை யேகிய புதுமையே போல
மைக்க ரும்புயன் மீதுற மீண்டினி வருவார்.
485