|
என்கொல்
வானுற நோக்கிநீர் நிற்பதிங் கென்னா
மின்கு லாவிய வுடையினர் வெள்ளிடை கரப்பப்
புன்க ணோடடி யவரெலாம் பொருப்பைவிட் டகன்று
நன்கொ ருப்படு மனத்தராய் நகரியின் மேவி.
|
486 |
|
|
|
|
நம்பி
ரான்றிரு வாக்கினி னலந்திக ழாவி
இம்ப ருற்றிடு காறுமா லயந்தரித் திருந்து
பைம்பு யற்றிர ணோக்குவான் பயிரெனக் குரவர்
உம்பர் நோக்கிய சிந்தைய ரொருங்குதொக் கிருந்தார்.
|
487 |
|
|
|
|
மேக
வாகனா ரூடராய் விட்புலத் துருவி
மாக மீதுமீ துயர்பதம் யாவையும் வரைந்து
சோக நீங்கிய சுரகணந் தொழுதுவாழ்த் தெடுப்ப
ஏக நாயகன் சந்நிதி யடைந்தன ரெம்மான்.
|
488 |
|
|
|
|
ஒரும
கன்பர திரித்துவத் தொருத்துவ ருரிமைத்
திரும கன்றம தாணையி னொழுகிய செல்வன்
கரும பூமியிற் பிரிந்துபோய்க் கடுந்துய ரடைந்து
வரும கன்னெனிற் றாதையி னுவகையார் வகுப்பார்.
|
489 |
|
|
|
|
புனித
மாயுயர் போதமாய் விளங்கிய புத்தேள்
கனித னீர்மையிற் காதலற் குவந்துகை யளித்த
தனித மாரருள் பொழிகிரு பாசனந் தன்னில்
இனிது வீற்றிருந் தருளினர் கிறிஸ்துவா மீசன்.
|
490 |
|
|
|
|
சந்த
தம்நர ஜீவருக் கிரக்ஷணை சமையச்
சுந்த ரத்திரு மேனியிற் றுலங்குமைங் காயந்
தந்தை யார்திரு விழிப்படுத் தின்னருள் தழைப்ப
விந்தை யாகமன் றாடலே நம்பிரான் வேலை.
|
491 |
|
|
|
|
மூன்றொன்
றாகிய முழுமுதன் முந்துநிண் ணயம்போல்
தோன்றல் வேண்டலிற் றாதையார் தூயநல் லாவி
ஆன்ற ஜீவகோ டிகளுய மெய்யறி வளிப்பான்
ஏன்று வந்தரு ளுருக்கொடு மகிதலத் திறுத்தார்.
|
492 |
|
|
|
|
கோதி
லாத்தவம் புரிந்துதே வாலயங் குழீஇய
ஆதி தேசிக ரிடத்தனல் வடிவமா யமர்ந்து
பூத லத்தினங் கிறிஸ்துவின் புண்ணியம் பொலியக்
காத லாய்வர மளித்தனர் கதிவழி காட்டி.
|
493 |