பக்கம் எண் :

271

  அன்று தொட்டருட் குருபரம் பரைநிய மத்தால்
இன்று காறுநின் றவித்தையை யிகலற நூறி
ஒன்றி யாலம்வித் தீண்டல்போ லுலகெலாம் பரம்பிக்
குன்று றாதுமெய்த் திருச்சபை குலவுகின் றதுகாண்.

494
   
  அனந்தர் நீக்கிமெய் யறிவினைக் கொளுத்தியாண்                                    டகைபான்
மனந்தி ருப்பிர க்ஷணைவிசு வாசத்தை வளர்த்துத்
தினந்தி னம்புதி தாக்கியான் மாக்களைத் தெருட்டல்
அனந்த மங்கள வாவியி னருட்செய லறிதி.
495
   
                     இரக்ஷணிய சரிதப் படலம் முற்றிற்று.
   
 
விசிராந்திப் படலம்
 
   
  இத்திறந ராத்துமவி ரக்ஷணைமு டித்த
வித்தகச ரித்திரம்வி ரித்தினிது ரைக்க
உத்தமகி றிஸ்தவனு ணர்ச்சியொடு கேட்டே
பத்திமுக நோக்கிவிந யத்தொடிவை பன்னும்.
1
   
  ஆசறும னத்தியென தன்னையரு ளாளன்
பேசரிய பாடுகள்பி றங்குசரி தத்தை
மாசில்விசு வாசநனி மல்கியுர மாக
நேசமொடு ணர்த்திணையெ னெஞ்சிடைய ழுந்த.
2
   
  பூவலய முய்யவரு புண்ணியமு நித்ய
ஜீவநிலை யும்மினிது சித்திபெறு மாறும்
ஓவறவி ளக்கினையி தோர்ந்தளிய னாற்ற
ஆவதுகொ னிற்கொருகைம் மாறுபிறி தம்மா.
3
   
  பண்டைமறை பன்முறைப டித்துமுள னேனும்
ஒண்டொடிநின் வாய்மொழிக ளுட்பொருளு ணர்த்தும்
எண்டகுவி ளக்கமித யத்தொளிர வைத்தாய்
அண்டருல கெய்துவரை யும்மவிவ தின்றால்.
4
   
  நன்மையளி யேமுறந லந்திகழு நம்பன்
கொன்மலித ருங்குருசி லேகுருதி சிந்தித்
தன்மனமு வந்துதலை சாய்த்ததிருக் கோலம்
என்மனவி ழிக்கெதிரி லென்றுமுள தெம்மோய்.
5