பக்கம் எண் :

272

  நொந்துவதை யுண்டதிரு மேனியுநொ றுங்கிச்
சிந்துதிர மும்புனித ஜீவவுண வாகும்
சந்ததநு கர்ந்துவரு சாதகம்வி ளைக்கும்
விந்தையுறு சிற்சுகமி தேயென்விசு வாசம்.

6
   
  இற்றையிர வும்மிடமி றுத்தரிய போதம்
உற்றதும கேசனரு ளுற்றுதவு பேறாம்
நற்றவந லத்தியென நன்றியறி தக்க
பெற்றியன்வ ணக்கமொடு பேசினன்வ ழுத்தி.
7
   
  ஏனையரு நன்றிதெரி யின்னுரையி யம்ப
ஆனனம லர்ந்தனைவ ரும்மமுத மன்ன
போனகம மைந்துவர வுண்டுபுது மைத்த
தூனறிய சிற்சுவைய பானநறை துய்த்தார்.
8
   
  மருந்தனைய தைவிகம காகருணை மல்கும்
விருந்தினித ருந்தியபின் மெய்யுணர்வி னுள்ளந்
திருந்தடியர் நன்றியொடு செம்மலையி றைஞ்சிப்
பொருந்துதுதி தோத்திரமுறைப்படிபு கன்றார்.
9
   
  மற்றிவைநி கழ்ந்தபின மாண்பினர்ம கிழ்ச்சி
உற்றொருவ ருக்கொருவ ரன்பின்விடை யுய்ப்ப
நற்றவனு மங்கவர்ந யந்தினித ளித்த
விற்றவழு மாளிகையின் மேனிலைபு குந்தான்.
10
   
  ஜீவவச னத்திருவி ளக்கொளிதி கழ்ந்து
மேவகவி ருட்டறவி ளக்கவிசு வாசத்
தாவலொடு மாண்டவரு ளாசனம டுத்துப்
பாவலர டைக்கலவி யற்றமிழ்ப டிப்பான்.
11
   
      தேவாரம், கையடைப்பதிகம். (பண், தக்கராகம்.)
   
1. ஓதியே சுருதி தினந்தினம் படித்து முணர்விலா
                           துலகொழுக் குவந்து
தீதிலே பயின்று செந்நெறி யிகந்த தீயனே னுய்யுமா
                                    றறியேன்
கோதிலாநிதிக் கொழுங்கதிர்ப்பிழம்பே குணிப்பருங்
                           கருணைவா ரிதியே
ஆதியே யடியே னின்சர ணடைந்தே
                  னஞ்சலென்றடைக்கல மருளே
.
 
2. பத்தனாய்ப் பாடேன் சுத்தனா யொழுகேன் பகலெலாம்
                                 பாவமே பழகி
எத்தனாய்க் கழித்தேனின்றுளே னாளையிலனென
                          வெண்ணவும் படுவேன்
பித்தனேற் குனது பேரரு ளல்லாற் பிழைக்குமா றில்லையா
                                     தலினால்
அத்தனே யடியே னின்சர ணடைந்தே னஞ்சலென்
                              றடைக்கல மருளே.