பக்கம் எண் :

273


3. கலைக்கணுக் கரிய காட்சியே சிரத்தைக் கண்ணினுக்
                          கெளியகண் மணியே
புலைக்குடி லோம்பும் புன்மதி யதனாற் பொருவரும்
                        பொழுதைவீண் போக்கி
உலைக்கம டம்போ லுலகமா யத்தை யுவந்தநின்
                          மூடனென் றுளச்சான்
றலைக்கநொந் தடியே னின்சர ணடைந்தே னஞ்சலென்
                             றடைக்கல மருளே.
 
4. மண்டலெத் தெனைப்போற் பாவியுமில்லை மற்றுனைப்
                         பொருவதோர் தெய்வம்
உண்டொருக் காலென்றுணர்வுளா ரெவரு முரைத்திடா
                           ருண்மை யாதலினால்
தொண்டருக் கிரங்கி மநுவுரு வெடுத்த தொல்லைமூ
                               லப்பரஞ் சுடரே
அண்டருக் கரசே நின்சர ணடைந்தே னஞ்சலென்
                             றடைக்கல மருளே.
 
5. வெப்புறு பாவ விடத்தினைப் பருகி மெய்யறி விழந்துனை
                                      மறந்தேன்
அப்புற வுலக மடுக்கிலென் செய்கே னாண்டெனக்
                                  காதர வியாரே
ஒப்புற வுயர்ந்த வொருதனி முதலே யுணர்வுடை
                              யோலத்துக் குருகும்
அப்பனே யடியே னின்சர ணடைந்தே னஞ்சலென்
                               றடைக்கல மருளே.
 
6. எனாதிய னென்னு முடல்பொரு ளாவி யிவையொரு
                              மூன்றையு மின்னே
உனாதென வுனக்கே கையளித் தெளியே னுன்னருட்
                              பற்றையே யுவந்து
மனாதிதத் துவங்கட் கதீதமா யன்பர் மனத்தவி சுகந்துவீற்
                                     றிருக்கும்
அநாதர க்ஷகனே நின்சர ணடைந்தே னஞ்சலென்
                              றடைக்கல மருளே.
 
7. படித்தொழும் பாகிப் பதைத்துழல் வேனைப் பரிந்துன
                              தருள்வழி பரப்பிக்
குடித்தொழும் பாக்கிக் கொண்டகோ மானே குன்றிடா
                             விழுநிதிக் குவையே
மிடித்தொழும் பினையு மகற்றிடா தென்னோ விநயமே
                                தும்பிறி துளதோ
அடித்தொழும் பலனோ வப்பனே யடியேற் சஞ்சலென்
                               றடைக்கல மருளே.
 
8. உருளுறு சகடம் போலவென் மனமு மொருவழி
                              நிலையிலா துழலும்
மருளுறு முலகோ டலகையுங் கொடிய மாயமாம்
                           வலையிடைப் படுத்துந்
தெருளுறு பொருளே நின்னடிக் கன்பு செய்துநா னுய்யுமா
                                      றெங்ஙன்
அருளுறு மெந்தாய் நின்சர ணடைந்தே னஞ்சலென்
                               றடைக்கல மருளே.
 
9. என்புதோல் போர்த்த யாக்கையைச் சதமென்
             றெண்ணியாத் துமத்தை யெட் டுணையும்
முன்பினெண் ணாது புரிந்ததீ வினையென் முன்புநின்
                           றுடற்றலான் முதிர்பேர்
இன்பநாட் டரசே புண்ணியப் பொருப்பே யிருநிலம்
                          புதைத்தெழுந் தோங்கும்
அன்பினார் கலியே நின்சர ணடைந்தேன
                        ஞ்சலென்றடைக்கல மருளே.