10 |
.
புறத்தொரு புகலு மிலையுனை யல்லாற் பொய்யுறு
மலகையின் புணர்ப் பாம்
முறத்தினிற் புடையுண் டயருவேன் கருணை முளரியை
மூடுதன் முறையோ
மறத்தியோ மாறா மெய்திரு வாக்கை வரதனே யபயனே
வண்மை
அறத்தனி முதலே நின் சரணடைந்தே
னஞ்சலென்றடைக்கல மருளே.
|
|
|
11. |
மருண்மனோ
வாஞ்சைச் சுழலிலே யுழலும்
வறியபுன்றிரணமென் னாவி
இருண்மலோ ததிபுக கழுந்திடி லந்தோ வென்செய்கே
னேழை நின்னடிமை
தெருண்மனோ கரமே ஜீவதா ரகமே திகழ்குண மேருவே
சீர்சால்
அருண்மகோ ததியே நின்சர ணடைந்தே னஞ்சலென்
றடைக்கல மருளே. |
|
|
12. |
வேதமே
வேத விளக்கமே விளக்கின் விழுத்தகு ஜோதியே
விமல
போதமே போதங் கடந்தமெய்ப் பொருளே பொருள்புலப்
படவெளி வந்த
நாதமே யூத குலநரா திபனே நன்னெறி பிழைத்துல
குழலும்
ஆதனா னடியே னின் சரணடைந்தே னஞ்சலென்
றடைக்கல மருளே. |
|
|
13.
|
வாழியா
ரணநூல் வரம்பெலா மிகந்து மதியிலாப்
பேதையான் மயங்கிக்
கீழியான் பிழைத்த பிழையெலாம் பொறுத்துன் கீருபைதந்
தருளெனக்கெஞ்சி
ஊழியா யூழிக் குறையுளா யெவையு முலப்பினு
முலப்பிலாத் தரும
ஆழியா யடியே னின்சர ணடைந்தே
னஞ்சலென்றடைக்கலமருளே.
|
|
|
|
தேவாரம்
முற்றிற்று. |