பக்கம் எண் :

275

  பின்னுறுவ தோர்கிலர்பெ ருந்தனமி டுக்கர்
முன்னுறவி யற்றுவர்பல் தீங்குமுறை பேணிர்
துன்னிருளு மப்பரிசு தொல்கவின ழித்த
மன்னுலகை யென்றெதிரு மாறுணர்கி லாதே.

15
   
  அற்புணரி சுண்டியகி லந்திகழும் வண்ணம்
பிற்புணரும் வைகறைபி றங்கியது வஞ்சர்
சற்பனையின் வெவ்விடர்ச திக்கவரு மேனுந்
தற்பரன ருட்கெதிர்த ரித்தியல்வ தேயோ.
16
   
  சூழிகலி ருட்பகைது மித்தறவெ றிந்து
பாழியுல கத்தினைவி ளக்குமோர்ப தங்க
ஆழியர சற்குரிய கட்டியம டுத்துக்
கோழிமுத லாயினவி ளித்தனகு லாவி.
17
   
  சஞ்சலமு டித்தலைத ரிக்கவச மின்றி
எஞ்சியவி ருஞ்சுடரெ ழுந்ததுகு ணக்கில்
நஞ்சிருளி லேதனிந டந்தமறை வாணன்
அஞ்சரிதம் யாதெனவ டுத்தறிகு வான்போல்.
18
   
  வலிந்தொளிகி ளம்பியுத யந்திகழ வல்லே
மெலிந்திருளி ரிந்தனது யின்றனவி ழித்த
மலிந்தனவ யின்றொறும்வ ழங்குபல வேலை
பொலிந்தனத ராதலமோர் புத்துலக மேபோல்.
19
   
  பத்திமதி யூகிவிசு வாசிபர மார்த்தி
வித்தகிசி நேகிதயை வேதவதி யாதி
உத்தமிக ளுன்னதம கீபதியை யுள்ளிச்
சித்தமொடு நித்திரைதெ ளிந்தனரெ ழுந்தார்.
20
   
  காலையெழு முன்னிரவு கண்டுயில்பொ ருந்திச்
சாலவரு டந்துசம ரக்ஷணைச மைத்த
சீலமிகு ஜீவபதி சேவடிப ழிச்சிக்
கோலமறை யோனுணர்வு கூடினனெ ழுந்தான்.
21