பக்கம் எண் :

276

        தேவாரம்,காலைத்துதி, (பண், காந்தாரம்.)
 
1. எந்தையே ஸ்தோத்திர மிகலின் மன்பொதுத்
தந்தையே ஸ்தோத்திரஞ் சருவ லோகமும்
விந்தையாய்ப் படைத்தருள் விமல ஸ்தோத்திரம்
அந்தணா ஸ்தோத்திர மனந்த ஸ்தோத்திரம்.
 
2. பொருட்படு பொறிபுல னொடுங்கிப் பொன்றல்போன்
மருட்படு துயில்கொளீஇ மறந்திக் கங்குல்வாய்
இருட்பெருங் கடல்குளித் தேனைக் காத்தனை
அருட்பெருங் கடலனா யனந்த ஸ்தோத்திரம்.
 
3. எத்தனை யோவிபத் திரவிற் றேர்கிலேன்
அத்தனை யுந்துரந் தருள்வி ழிக்கடை
வைத்தெனக் காருயிர் வழங்கிக் காத்தனை
அத்தனே நின்னடிக் கனந்த ஸ்தோத்திரம்.
 
4. எண்ணவெம் மாத்திர மேழை யானுன
புண்ணிய விழித்துணை பொருந்து றாதெனைக்
கண்ணிய துயிலிடைக் காத்த ளித்தனை
அண்ணலே நின்னடிக் கனந்த ஸ்தோத்திரம்.
 
5. கனவிரு ளகற்றியிக் காலை யுய்த்தல்போன்
மனவிரு ளதனையு மாற்றி நீதியின்
தினகர னருள்வழி செலுத்தி யென்னையான்
அனகனே நின்னடிக் கனந்த ஸ்தோத்திரம்.
 
6. கண்டுயி னீத்ததுங் கருணை மைந்தனைக்
கொண்டெனை மீட்டதுங் குறிக்கொண் டன்பொடு
தொண்டுனக் கியற்றமெய்த் துணிவு தந்தருள்
அண்டர்நா யகவுனக் கனந்த ஸ்தோத்திரம்.
 
7. மாதிரம் யாவையும் வளைந்த வல்லிருட்
போதிலே பலர்புந ருலகம் போகவும்
பேதையேற் கெமரொடும் பிழைப்பை யூட்டினை
ஆதியாய் நின்னடிக் கனந்த ஸ்தோத்திரம்.
 
8. ஐயமே லிடமர ணாந்த காரம்வந்
தொய்யென மூடிநின் றுடற்று மாயினுந்
துய்யபங் கயமுக ஜோதி காட்டியாள்
அய்யனே நின்னடிக் கனந்த ஸ்தோத்திரம்.
 
9. மைப்படு கங்குலைக் கடந்துன் வண்மையால்
இப்பகல் கண்டுனை யேத்த நின்றனன்
எப்பரிசி யான்கைம றியற்று கேனென
தப்பனே நின்னடிக் கனந்த ஸ்தோத்திரம்.