பக்கம் எண் :

277


10. திகிலுலாம் பலவிருள் சிதையத் திவ்விய
சுகிர்தமார் தருமொழிச் சுருதி வான்சுடர்
மகிதல மெங்கணு மலிய நல்குவாய்
அகிலலோ கேஸ்வர வனந்த ஸ்தோத்திரம்.

   
              தேவாரம் முற்றிற்று.

   
                  விசிராந்திப் படலம் முற்றிற்று.
   
 
காட்சிப் படலம்
 
   
  காத்தருள்பு ரிந்தகரு ணைக்கடவுள் வேந்தன்
ஏத்தரிய சேவடியி றைஞ்சியித யத்துப்
பூத்தவுணர் வோடுரிய பொற்புறுத வத்து
மாத்தகைய ரோடளவ ளாவினன்ம கிழ்ந்தே.
1
   
  தம்மகவு கண்டுருகு தாயரென வன்பின்
அம்மனைய ருங்கசிய கத்துவகை பொங்கிச்
செம்மொழிப கர்ந்துமறை யோய்சிறிது போழ்து
மம்மரக லிம்மனைவ திந்தகறி யென்றார்.
2
   
  மாதவவ ழிப்படுகை வல்யவயி ராக்ய
வேதியனு நன்றெனவி ருப்புடன்வி ளம்ப
மேதகைய சிற்சுகம்வி சித்தெனவி ளங்கும்
போதமுறு புத்தகவ ரங்குழைபு குந்தார்.
3
   
  வரங்குலவு புத்தகம லிந்துமதி தோயும்
அரங்குலௌஉ கீகவச டற்றெழில மைந்த
உரங்குலவி நின்றதையு ணர்த்துமறை வாணன்
பரங்குலவு ஞானமுறை பள்ளியறை யென்றான்.
4
   
  அருந்தவம டந்தையர றப்புறம மைத்த
பெருந்தகைகு ணாதிசய மாதியபி றங்கித்
திருந்துமுறை சிற்சிலதி றந்தினிய செஞ்சொல்
விருந்தினனு ளங்கொள்வி ரித்திடுவ தானார்.
5
   
  அலகில்புவ னங்களைய மைத்தியல றத்தை
நிலையுறநி றுத்தியரு ணீதிபுரி சீயோன்
மலையரச னோர்குமரன் வந்தவத ரித்த
குலவரிசை யீதெனவி ளக்கினளோர் கோதை.
6