|
ஆக்கரிய
சத்திரமி தாக்கியவ நாதி
கோக்குமர னீண்டுபுரி கோதில்கிரி யாதி
மீக்கருணை மீட்டவர்பெ யர்த்திறம்வி ளங்க
வாக்கியமெ டுத்தினிது ரைத்தனளோர் மங்கை.
|
7 |
|
|
|
|
மீட்சியுறு
மன்பதைகள் வீட்டுலக மேவி
ஆட்சியுறு மாளிகைய னந்தமழி வில்லா
நீட்சியுறு சிற்சுகநி றைக்கநிறை வெய்தி
மாட்சியுறு மென்பதைவ குத்தனளோர் மாது.
|
8 |
|
|
|
|
சத்துருபு
றக்கொடைத ரச்சமரில் வென்று
பத்தர்சிலர் ராஜ்யபரி பாலனந டத்தி
முத்திநக ரத்திறைமொ ழிந்ததிரு வாக்குத்
தத்தவர முற்றபடி சாற்றினளோர் தையல்.
|
9
|
|
|
|
|
அண்டருல
கத்தரச னாணையின மைந்த
தொண்டர்சில ரங்கியெரி சூளையுளு லாவிச்
சண்டவரி மாவொடுத ரித்ததையெ டுத்து
விண்டனள்ம னங்கரைய மெல்லியலொ ருத்தி.
|
10 |
|
|
|
|
நண்ணலர
டர்ந்துயிர்ந டுங்கிபுட னைய
எண்ணிரிய வாதைகளி யற்றியடு போழ்தும்
அண்ணலடி யார்பலர றத்திறமி ழுக்கா
வண்ணமிதி தென்றுரைவ குத்தனளோர் வல்லி.
|
11 |
|
|
|
|
வானமொடு
பூமிநிலை மாறுகினு மாறா
மேனிகழ்வ தென்றுரைசெய் சம்பவ விதங்கள்
தானமிசை முற்றிமுறை சான்றுபடு மென்னா
ஞானமிகு தீர்க்கமொழி காட்டினளோர் நாரி.
|
12 |
|
|
|
|
கொன்புலையர்
பைப்பயவ ளர்த்தெரிகொ ளுத்த
என்புகரு கித்தனுவெ ரிந்துபடு போழ்தும்
மன்புதல்வ னன்பையுண்ம தித்திருவர் மாய்ந்த
அன்பின்வலி நன்குறவி ளக்கினளோ ரம்மை.
|
13 |
|
|
|
|
தற்பாகு
மாரனதி சற்குணவி காசம்
அற்புதவி தங்கள்பர மாச்சரிய ஞானம்
பற்பலசு கிர்த்தியப லங்களிவை யெல்லாம்
பொற்புறவி ளக்கினர்பல் பூவையர்கள் மாதோ.
|
14
|