|
இத்திறம
தங்கியரி யம்புமொழி கேட்டும்
உத்தமமொ ழித்திறமு ணர்ந்துமறை வாணன்
வித்தகம றைப்பொருள்வி ளக்குமிதி காச
சத்தியம் றிந்துமகிழ் வோடுதரி கொண்டான்.
|
15 |
|
|
|
|
போயதொரு
நாண்மறுப கற்பொழுது போந்து
மேயதென மாதவிகள் வேதியனோ டேகித்
தூயதிரு மந்திரசு யம்பிரபை தோய்ந்த
ஆயுதவ ருக்கநிறை சாலையைய ணைந்தார்.
|
16 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
கண்கவருங்
கவினார்ந்த கனகமணி மண்டபத்துப்
பண்கவரு மொழிமாதர் பலர்குழுமிப் பணிந்தேவ
விண்கவர மிளிர்பத்தி வேதியன்றன் முகநோக்கி
எண்கவரும் படைக்கலங்க ளியன்முறைமை
யெடுத்துரைப்பாள்.
|
17 |
|
|
|
|
பேராழி
கரைபுரண்டு பிறழாமற் பவஞ்சத்தை
ஓராழி யெனவுருட்டி யுதித்தொடுங்கித் தினஞ்செய்வான்
ஏராழிக் கதிர்நிறுவி யியற்கைமுறை புரிதருமச்
சீராழிப் படையீண்டு திகழ்கின்ற திறநோக்காய்.
|
18
|
|
|
|
|
சலங்காட்டி
யழிக்காது தயைகாட்டி யரசர்பிரான்
புலங்காட்டிப் புறச்சமயப் புரைகாட்டி யிரக்ஷணிய
நலங்காட்டிக் குணங்காட்டி நயங்காட்டிப் பகைப்புலத்தை
வலங்காட்டி யிழுக்கின்ற மணிப்பாச மிவைகாணாய். |
19 |
|
|
|
|
பாருதித்த
விளவரசன் பகைப்புலத்துக் கொடுங்கூளி
காருதித்த தெனவெதிர்ந்து கைகலப்பக் கொழுங்குருதி
வேருதிக்கப் பொருதழித்து விறல்புனைந்த மேனாளிக்
கூருதித்த படைக்கலங்கள் குறிக்கொண்ட படிகாணாய்.
|
20 |
|
|
|
|
ஒருகானம்
பெருமானிங் குபவாசம் புரிகாலை
அருகாக வெதிரூன்றி யடரலகை பெருங்காற்றிற்
சருகாகப் பறந்தோடிச் சமர்தொலையத் தனிவழங்கும்
இருகூர்ப்பட் டயங்களிவை யெந்துணைவ வெதிர்நோக்காய்.
|
21
|
|
|
|
|
உத்தமர்கை
யெடுத்துந்தி யொருபுயங்கப் பஃறலையும்
பித்தளைந்த கொடுங்காமப் பேய்த்தலையும் பிரபஞ்சச்
சத்துருவின் பெருந்தலையுந் தகர்ந்துசித றிடப்புடைத்த
பத்திவயி ராக்யமெனும் பருந்தண்ட மிவைபாராய்.
|
22 |