|
வலிந்திழுக்க
விழுக்கவளை மானதகோ தண்டமொடும்
நலிந்தனற்கு மிடையாத நார்க்கயிற்று நாணியொடும்
மலிந்துதவு நல்லிதய மந்திராத் திரப்புட்டில்
பொலிந்திலங்கு வனவேத புங்கவளிங் கிவைகாணாய்.
|
23 |
|
|
|
|
குத்திரமித்
தியமாதி கொடும்படைகள் பலவீசி
நித்தியசத் துருவாய நீசப்பேய் மகார்குழுமி
எத்திசையு மலைந்தாலு மிகலழிக்கும் விறலளிக்குஞ்
சத்தியமா மரைக்கச்சை தயங்குவன தனிநோக்காய்.
|
24 |
|
|
|
|
ஏவாளை
வசப்படுத்தி யிகங்கெடுக்குங் கெடுதோஷி
ஓவாது படைசிதறி யோச்சியெறிந் துடற்றுகினுஞ்
சாவாமற் செய்தருமந் தலைகாக்கு மெனக்காக்குந்
தாவாத விரக்ஷையெனுந் தலைச்சீரா விவைகாணாய்.
|
25 |
|
|
|
|
கரையிகந்த
பெருந்துன்பக் கடுங்கூர்முட் கணையானுங்
குரைபழிபொய் நிந்தையெனுங் கொடுஞ்சிலீ முகத்தானும்
வரையினையுந் தரையாக்கும் வறுமைச்சா யகத்தானும்
புரைபடா நீதியெனும் பொற்கவசம் பலபாராய்.
|
26 |
|
|
|
|
குருசுயர்த்த
பெருமானைக் குறிக்கொண்டு மனந்திரும்பி
விரசுமினோ சுவிசேஷ விபுலத்தென் றோலிடுமோர்
அரசர்பிரா னூழியத்துக் கனவரதா யத்தமென
உரைசெறியும் பாதரக்ஷை யுலப்பிலமற் றிவைநோக்காய்.
|
27 |
|
|
|
|
பெரியபூ
தரங்களையும் பெயர்த்தெறியும் பித்தளைந்து
திரிபுவன கோசரத்தைத் திரணமா யவமதிக்குந்
துரியபூ மியைத்துருவிச் சுலவிவரு மன்பினொடு
கிரியைசெயும் விசுவாசக் கேடகங்க ளிவைநோக்காய்.
|
28 |
|
|
|
|
நீசனர
சியறொலைத்து நிமலாவி கிறிஸ்துவெனும்
ஈசனர சியனிறுவ வெதிரூன்றும் ரணகளத்துப்
பாசறையிற் படைவீரர் படைக்கலமந் திரஞ்செபித்துப்
பூசைபுரி யுபகரணம் பொலிந்திலங்கு வனபாராய்.
|
29
|
|
|
|
|
விண்ணுடுவிற
குணிப்பரிய படைவீரர் மிகுத்திடினும்
எண்ணிறந்த படைக்கலங்க ளேற்றமுறு மிழுக்காவால்
கண்ணியகூர் மழுங்காமற் கருதுகுறி விலகாமற்
புண்ணியம்போற் பொருதுவிறல் புனைவனமற்
றிவைநோக்காய்.
|
30
|