பக்கம் எண் :

281

  வித்தகமெய்ச் சுவிசேஷ விசுவாசி யிவையெல்லாம்
பத்தருக்குப் பொதுவாய படைக்கலங்கள் பரஜீவன்
முத்தருக்கு விறல்வாகை முடிபுனைந்து முனைமுகத்திற்
சத்துருவைப் புறங்கண்ட தனிப்படைக ளிவைபாராய்.

31
   
  பங்கமுற வெகிப்திலொரு பதுவாதை விடுத்ததுவுஞ்
செங்கடலிற் பார்வோனைச் சேனையொடு கவிழ்த்ததுவுங்
கங்கைபெருக் கெடுத்தோடக் கருமலையைப் புடைத்ததுவும்
நங்குரவன் விதிக்கிழவன் நடுக்கைக்கோ லிதுகாணாய்.
32
   
  மண்டலமெல் லாந்திகைக்க வலஞ்சூழ்ந்து சூழ்ந்துலவிப்
பண்டெரிகோ மதிலிடிந்து பாழாகும் படிபருவக்
கொண்டலிடி முழக்கமெனக் கோத்தபே ரொலிகிளப்பி
எண்டிசையும் புகழ்படைத்த வெக்காள மிதுநோக்காய்.
33
   
  வசையாக வறுநூறு மறவோரைச் சம்கார்முன்
இசையாகப் பொருதழித்த தாற்றுக்கோ லிதுகாணாய்
பிசகாது கறுவோடு பெண்ணொருத்தி பிடித்துந்திச்
சிசராவை யுயிர்கவர்ந்த ஜெயமுளைமற் றிதுகாணாய்.
34
   
  தொகைகண்டு சொலவரிய பெருஞ்சேனைத்
                              தொகுதியெலாம்
புகைகண்டு மறைவதுபோற் பொருகளத்துத்
                              தொலைவெய்தும்
வகைகண்டு கீதேயோன் வன்கையின் வயப்படையாப்
பகைகண்ட திலையென்னப் பிடிபந்தம் பலகாணாய்.
35
   
  நமராய விஸரேற்கு நடுவனாய்ப் பகையிருட்குத்
திமிராரி யாயுலவி யொருதனியே திறல்காட்டி
அமராரைச் செயங்கொண்ட வந்நாளிற் சிம்ஸோற்குச்
சமராடுங் கைக்கருவித் தாடையெலும் பிதுபாராய்.
36
   
  இதங்கொண்ட வருட்டாவீ தெனுஞ்சிறுவ னெதிரூன்றி
விதங்கொண்ட பெருஞ்சேனைப் பெலிஸ்தியர்வெந்
                                    நிட்டோட
மதங்கொண்ட பெருங்காய வல்லரக்கன் மடிந்துவிழக்
கதங்கொண்டு வீசியெறி கவண்கற்க ளிவைகாணாய்.
37
   
  மங்கலத்தின் னிசைமலிந்த வானுலகத் திளவரசன்
அங்கரத்தங் கொடுமீட்ட வடிமைகளைச் சூறையிட
உங்கரித்துப் பாவநர னுக்கிரத்தோ டெழுநாளிற்
சங்கரிக்க வினியெடுக்குந் தழனிறப்பட் டயங்காணாய்.
38