(பொ
- ரை) வனையப்பெற்ற பொன்னாலாகிய வீரக்கழலை
யுடையவனே! இத்தகைய சிந்தனைகள் எனது ஹிருதயத்துள்
ஊன்றியிருத்தலால் வருந்துகின்றேன் என்று ஆத்துமவிசாரி சொல்ல,
அவற்றையறிந்து புறத்தியாருடைய நன்மையையே எப்பொழுதும்
நினைக்கின்ற சுவிசேஷகனும் கீழ்வருமாறு கூறுவான்.
|
நன்றுநன்
றுன்னிலை நாச தேசத்து
நின்றுநின் றித்துணை தாழ்த்த னீதியோ
பொன்றிடர் வருமுனம் புகலி டம்பெறச்
சென்றிடா திவணுழல் சிந்தை யென்னென்றான். 13
|
(பொ
- ரை) உனது நிலைமை மெத்த நன்றாயிருக்கின்றது! நீ
நாச தேசத்தில் இவ்வளவு தாமதித்து நிற்றல் நீதியோ? கொல்லத்தக்க
துன்பம் வருமுன்னே அடைக்கல ஸ்தானத்தைத் தேடிச் சென்றிடாமல்
இவ்விடத்தில் சுற்றித் திரிகிற சிந்தை என்ன என்றான்.
|
உய்வழி யிதுவிதென் றுழறும் பல்வழி
பொய்வழி யவ்வழி போகு வேனலன்
தெய்வநா யகன்திரு நகர்க்குச் செல்வழி
எவ்வழி யவ்வழி யின்னுந் தேர்கிலேன். 14
|
(பொ
- ரை) இரட்சிப்பின்மார்க்கம் இது இது என்று புவியோர்
உளருகின்ற பல வழிகள் பொய் வழிகள். அவ்வழிகளில் நான்
செல்லமாட்டேன். தெய்வநாயகன் திருநகர்க்குச் செல்லுகின்ற வழி
எவ்வழி? அவ்வழி எது என இன்னும் நான் அறியேன்.
|
ஆதியான் றிருநக ரடுக்குஞ் ஜீவநற்
பாதைநீ யறிதியேற் பகர்தி யாலென
வேதியர் குரவனை வினவி னானவன்
ஓதுவல் கேட்டியென் றுரைத்தன் மேயினான். 15
|
(பொ
- ரை) ஆதியான் திருநகர்க்குச் செல்லும் ஜீவபாதையை நீ
யறிந்தாயானால் அதையெனக்குச் சொல்லென, வேதியர் குருவாகிய
சுவிசேஷகனை வினாவினான். அதற்கு அவனும் 'நான் சொல்லுகிறேன்
கேள்' என்று சொல்ல ஆரம்பித்தான்.
குருதரிசனப்
படலம் முற்றிற்று.
______________________
|