|
பண்ணாடு
மொழிச்சியர்தாம் வேதாந்தப் பளிங்குநிலைக்
கண்ணாடி வழியாக விசுவாசக் கண்கொண்டு
விண்ணாடு புகுஞ்சிகர வியன்கிரியை வேதியநீ
உண்ணாடுங் கருத்தொன்றி நோக்குகவென் றினிதுரைத்தார்.
|
47 |
|
|
|
|
வேறு
|
|
|
|
|
|
சகல
கேவல மாதிய தத்துவார்த் தத்தைப்
பகரு நூனெறி கற்றிய பவித்திர னோக்கப்
புகரி லானந்த மால்வரை யியல்பெலாம் பொருந்த
நிகரில் பத்தியா நேரிழை நிகழ்த்துவ தானாள்.
|
48 |
|
|
|
|
விண்ணெ
றிப்படும் வேதிய மாநுவேல் விளைத்த
புண்ணி யம்புவி போர்த்துமீ தோங்கிய புரைய
மண்ணின் மன்னுயிர் வளம்பெற வழங்குமிம் மலையங்
கண்ண கன்விசும் பணவிநின் றிடுநிலை காணாய்.
|
49 |
|
|
|
|
நோன்மை
மிக்குயர் வேதிய நுவலரு மரசன்
ஆன்ம கோடிகட் காக்கிய வானந்த மனைத்தும்
வான்மு யங்குமிம் மலையெனத் திரண்டுரு வமைந்த
பான்மை போலுள காட்சியே தெரிப்பன பாராய்.
|
50 |
|
|
|
|
கெடுத்து
முப்பகை தொலைத்தமெய்க் கிறிஸ்தவ முத்தி
அடுத்த தொண்டர்க்கென் றாக்கிய வானந்த போகம்
மடுத்த நித்திய பேரின்ப மாடமா ளிகைகள்
கடுத்தி லங்குபொற் சிகரங்கள் கணிப்பில காணாய்.
|
51 |
|
|
|
|
அனகன்
சேவடிக் கன்புசெய் யாரண வமலன்
சினக ரந்திகழ் பயற்றறி நிழலிடு செயல்போல்
வனக ராசல நிரைபொரூஉங் கருமுகில் வளைந்து
கனக மால்வரைச் சாரலிற் கவிவன காணாய்.
|
52 |
|
|
|
|
தொக்க
பேரிடர் மலைமிதித் தேறிய தோன்றால்
துக்க மாயவெங் கோடையைத் திசைதிசை துரந்து
பக்க மெங்கணு நல்லறப் பயிர்வளஞ் சுரப்பக்
கக்கு தண்ணருண் மழைமுகில் கஞலுவகாணாய்.
|
53 |
|
|
|
|
அறங்கு
லாமனத் தந்தண வந்தரத் தமரர்
இறங்கி யேறவென் றாக்கிய வேணியீ தென்னப்
பிறங்கு வான்முகட் டிழிந்துநின் றிம்பரிற் பிறழ்ந்து
கறங்கு வெள்ளரு வித்திரள் பொலிவன காணாய்.
|
54 |