பக்கம் எண் :

284

  பொருண யந்தெரிந் தவித்தையைப் போக்கிய புலவோய்
அருண யந்தமெய்ஞ் ஞானிய ரகமெனத் தெளிந்து
தெருண றும்புனற் றீர்த்திகை ஜீவரைப் புரக்குங்
கருணை வெள்ளமொத் தலர்வன வயின்றொறுங் காணாய்.

55
   
  ஊன ளாவுதுர்க் குணங்கடிந் தொதுக்கிய வுரவோய்
தேன ளாவிய கொழுமலர்ச் செழும்பயன் செருமி
வான ளாவிய ஜீவதா ருவினிழல் வயங்குங்
கான ளாவுதண் ணறுஞ்சுனை மிளிர்வன காணாய்.
56
   
  ஞான நாயகன் றிருவடிக் கன்புசெய் நண்ப
மானும் வேங்கையு மொருதுறை நீருண்டு மகிழ்வ
தேனி றாலிழி மதுவொடும் பழநறை தேக்கிக்
கான வேழமஞ் சிங்கமுங் களிப்பன காணாய்.
57
   
  பிள்ளை நீர்மையிற் குணநிலை பிறங்கிய பெரியோய்
கொள்ளை யாடுகோ ணாய்த்திரள் குலப்பகை யின்றித்
துள்ளு செம்மறித் திரளொடு தொடர்புகொண் டுலவிக்
கள்ளு லாமலர்ப் பொதும்பரிற் றுயில்வன காணாய்.
58
   
  உச்சி தற்கித யாசன நல்கிய வுரவோய்
செச்சை யாளரி யூனிரை தேர்கில தெருண்டு
கொச்சை யாட்டொடுங் கோக்குலத் திரளொடுங் குழுமிப்
பச்சை நாகிளம் புற்றழை கறிப்பன பாராய்.
59
   
  மேம்ப டும்பர சிற்சுகம் விழைந்திடு மேலோய்
தீம்ப யன்கடை வாயிழி யாயர்தஞ் சிறுவர்
தூம்பு றழ்ந்தபுற் றரவொடுந் தொகுகடு விரியன்
பாம்பொ டும்விளை யாட்டயர் பரிசினைப் பாராய்.
60
   
  தொல்லை யாரண துருவையா னிரைதுரூஉந் தொறுவர்
முல்லை யங்குழ விசைக்குறி முறைவழா தொழுகி
மல்ல லோங்குபுல் லாரவுண் டணிநிழன் மறிந்து
கல்ல ளைச்சுனை நீருண்டு வருவன காணாய்.
61
   
  மன்னு நித்திய ஜீவனை விழைந்தநன் மதியோய்
சென்னி வான்றொடு மாதவப் பள்ளியுஞ் செறிந்த
அந்ந லார்துற வாச்சிர மங்களு மறவோர்
பன்ன சாலையு முறைமுறை திகழுவ பாராய்.
62