பக்கம் எண் :

285

  எண்ட போதன விமக்கரு முதிர்ந்தசூ லெழிலி
விண்டு குத்தநித் திலம்புரை வெண்பனித் திவலை
அண்டர் கோன்படை வீரருக் காருண வாகப்
பண்டு பெய்தமன் னாவினை நிகர்ப்பன பாராய்.

63
   
  புன்மை சீத்துமெய்ப் பொருள்கடைப் பிடித்தவண் புலவோய்
நன்மை யேயலாற் றீமையெங் கணுமிலா நலத்தில்
தன்ம மாயசெஞ் சாலிநீர் வளத்தினாற் றந்த
பன்ம ணிக்குவை வயின்றொறும் பொலிவன பாராய்.
64
   
  சிலுவை தாங்கிநம் ஜேசுவைப் பின்றொடர் செல்வ
சுலவி வானரத் தொகுதிகள் சோலையிற் றுவன்றிக்
குலவு முட்புறக் கொழுங்கனிச் சுளையுண்டு குதட்டிப்
பலவி னீள்சிளை துயல்வரப் பாய்வன பாராய்.
65
   
  மடியி லாதுஞல் வேதிய வானராஜ் ஜியத்தின்
குடிகள் செய்கையிற் கொற்றவ னரும்பெருங் குணத்திற்
படியும் வசனமும் பரிமளம் பரப்பிடப் பரம்புங்
கடிகொ ணந்தன வனத்தெழில் கவினுவ காணாய்.
66
   
  தீங்க கன்றமெய்க் கிறிஸ்தவ செழித்தபூங் காவில்
மாங்கு யிற்குலத் தின்னிசை திசைதொறு மடுத்தல்
ஓங்கு பேரின்ப சிற்சுக முண்டிவண் வம்மின்
பாங்கு ளீரென விளிப்பது போன்றன பாராய்.
67
   
  இடர்சு டச்சுட விலங்குபொன் னெனமிளி ரெழிலோய்
அடரு மின்சுவை தருவவா ரோக்கிய மமைவ
கெடல ரும்நறும் பாகன கெழுமிய கிளைய
படரு முந்திரிச் செழுங்கொடித் தாறுகள் பாராய்.
68
   
  கரவி லாதுளம் பழுத்தமெய்ப் பத்தியிற் கனிந்தோய்
உரவு மால்வரை யோங்கிய தருக்குல முதவும்
விரவு தீஞ்சுவை விழுத்தகு கனிவருக் கங்கள்
பரவு தொண்டர்நற் கருமங்கள் புரைவன பாராய்.
69
   
  பைம்பொ னாட்டவர் பரவுமோர் பவித்திர புரியின்
செம்பொ னிஞ்சிமீ துயரிய செழுமணிக் கொடிகள்
உம்ப ரோங்குபைங் கழையர வுரிப்படா முறழ்ந்து
பம்பு கார்மழைப் படலத்தைப் பொதுப்பன பாராய்.
70