|
உத்த
மக்கலை ஞானமெய் யுணர்வுநல் லொழுக்கஞ்
சத்தி யந்தவஞ் சாந்தநற் றருமமே தயாளம்
நித்த மங்கள மாகிய குணங்களா னிமிர்ந்து
பத்தி யிற்றிகழ் மாடங்க ளளப்பில பாராய்.
|
71
|
|
|
|
|
பன்னு
வேதபா ராயண பரக்கநீ பார்க்கும்
மன்னு மானந்த மலைப்பிர தேசமற் றிதனைத்
துன்ன ரும்பரி சுத்தசேத் திரமெனுஞ் சுருதி
பொன்னி லத்திள வரசனே சதோதயம் புரப்பர்.
|
72 |
|
|
|
|
காவ
லன்றிருக் கருணையைக் கடைப்பிடித் துள்ள
ஜீவன் முத்தரே குடிகளங் கியல்வது செங்கோல்
பாவ தோடங்கள் யாதுமின் றாதலிற் பரம
ஜீவ நன்மையே கதிக்குமத் தேயத்துச் செய்யோய்.
|
73 |
|
|
|
|
சுமையைப்
போக்கிய தூயவ வானந்தந் துதைந்த
சிமையத் தேநின்று தென்றிசை நோக்கிடிற் சியோன்
இமையத் தாரெழின் முத்திமா நகரத்தை யெதிரில்
அமையக் காண்குவை கரதலா மலகமா யருகில்.
|
74 |
|
|
|
|
என்று
பத்தியா மாதவக் கிழத்திகண் ணெதிரில்
தென்றி சைப்படு காட்சியைத் தெள்ளிதிற் றெரிக்க
மன்றல் வேதியன் மலைநிலை மயலறத் தெருண்டு
நின்று பேரதி சயத்தொடு மற்றிவை நிகழ்த்தும்.
|
75 |
|
|
|
|
கண்ட
காட்சியிற் கதித்தவாச் சரியமுங் கருத்தை
உண்டெ ழுந்தபே ருவகையு முண்மையை வடித்து
விண்ட நின்னுரை விசேடமு மிவ்வென விதக்க
ஒண்டொ டீஇயெனக் குணர்ச்சிமட் டுரையுத வின்றால்.
|
76 |
|
|
|
|
சக்க
ராதிப னருட்புணை யாலன்றித் தமியேன்
துக்க சாகரத் தலறிய வெறிதிரைச் சுழியுட்
புக்கு நீந்தியிவ் வானந்தப் பொருப்பினைக் குறிக்கொண்
டக்க ரைத்துறை பிடித்திட லாவதோ வம்மா.
|
77 |
|
|
|
|
வழிதெ
ரிப்பதும் வழித்துணை யாவதுங் குறித்த
வழிந டத்தியா தரிப்பதும் வழியைவிட் டயலோர்
வழிபு காவகை மறிப்பது முடிவுமட் டாக
வழியின் மேவிடர் களைவதுந் திருவருண் மாட்சி.
|
78 |