288 |
|
|
|
|
|
சிலேஷை,
யமகம், திரிபு, மடக்கு முதலிய
சில கவிகளுக்கு அர்த்தம். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
21. |
நித்திய
ஜீவநீர்நிலை - சாவாத ஜீவனைச் சுரக்கின்ற
வாவிகள். (ஈண்டு தேவாலயத்தைக் குறித்தது.)
ழத்தி நாட்டெழில் - பரலோக ராஜ்யத்தின் அழகிய
வைபவங்கள்.
மயங்கக் காட்டலில் - தத்தமிற் பிரதிபிம்பித்துக்
காட்டுதலினாலே.
உத்தமக் குலத்து ஓதிமக்குழாம் - உத்தம வகுப்பிலுள்ள
அன்னப் பக்ஷிகளின் கூட்டம்.
அகன்றிடா - (அந்த நீர்நிலையை) விட்டு நீங்காமற் சதா
வசிக்கின்றன. (ஆதலால் அவைகள்,)
பத்திசெய் தவப்பள்ளி போலுமால் - பத்தியோடு
திருத்தொண்டர் தவம் பயிலுகின்ற தேவாலயம்போலு
முள்ளன என்றவாறு.
ஆல் - அசைநிலை.
விசேடவுரை. - பிரபஞ்ச வனாந்தரத்திலே நெறிதப்பி யலைந்து
திரிந்து இளைத்து விடாய்த்த ஆத்மகோடிகளுக்கு
அந்த விடாயைத் தணித்து ஆரோக்கியத்தையும்,
பரமசுகத்தையு மருளிக் காக்கவல்லது ஸ்ரீ கிறிஸ்து
பெருமானது கருணைப்பெருக்க மாதலில் அதனை
"நித்திய ஜீவநீர்நிலை" என்றும், அந்தக்
கருணைப்பெருக்கே ஜீவருக்கு அதிரிஸியமாயிருந்த
பரலோக பேரின்பவாழ்வைத் துலக்கமாய்க்காட்டிய
தாதலில் "முத்தி நாட்டெழின் முயங்கக் காட்டலில்"
என்றும், இத்யாதி உசித சுகாநுபவங்களை ருசித்தறிந்து
மேன்மேலு மாவாவி அந்த நிலையை விடாதுபற்றி
முயற்சிக்கின்ற சுவேதர்ணத்தாரான மாதர் கூட்டத்தை
"உத்தமக்குலத் தோதிமக்குழாம்" என்றும், ஆகவே
இந்தக் கூட்டத்தார் பிரதிதினமும் அநுஷ்டித்துவரும்
ஜெபதப விரதமுதலிய சத்கர்மாநுஷ்டானங்களும்
மெய்த்திருத் தொண்டர் நியமனப்படி குழீஇ
ஆண்டாண்டு முறையாய் நடத்திவரும் ஸ்துதி
தோத்திர ஜெபமுதலிய தேவாராதனையோடு
நிருவிகற்பமாய்த் தோன்றலில் அதனைப் "பத்திசெய்
தவப் பள்ளிபோலும்" என்றும், கூறினாம்
|
|
|
|
|
22.
|
மாக மீது நேர் - ஆகாயத்திற் கூடின.
கருணைமாரி பெய்மேகம் - அருள்மழை பொழிகின்ற
மேகத்தை. |
|
|
|
|