பக்கம் எண் :

289

கண்டு கண்டு உவந்து - பார்த்துப் பார்த்து மகிழ்ந்து.
வித்தகத் ரோகைமாமயில் - ஞானமுள்ள சிறந்த
    தோகையையுடைய மயில்கள். (சுதேச ஸ்திரீகள்.)
அகவுஞ் சூழல்வாய் - ஆனந்திக்கின்ற பொழில்கள்தோறும். நாகம் மாயுமே - தந்திரமுள்ள பசாசாகிய சர்ப்பந் தலை
    நீட்டாது ஒழிவான்.
நாகம் ஆயுமே
- சுவர்க்கலோகவாசிகள்
(இந்தக்காட்சியைக்)
    கூர்ந்து கவனிப்பார்கள். எ - று.
 
   
23. சீதவாவியின் - குளிர்ந்த தடாகங்களில்.
செய்ய பங்கயப்போது அலர்ந்திடும் போது -
செந்தாமரைப்
    புஷ்பங்கள் விரிகின்ற பிராதகாலத்தில்.
ஆதபன் கதிர் அலருங்காலையில் - நீதியின் சூரியகிரணம்
    விளங்குகின்ற (காலை யாராதனைக்குக் கூடுகின்ற.)
மாதர் வாண்ழக வாரிசங்களும் அலர்ந்திடும் -
ஸ்திரீகளின்
    பக்தி விளங்குகின்ற வதனாம்புயங்களும்
    விகசிதமாயலர்ந்து விளங்கும். எ - று.
 
   
24. இன்ன லுற்றவர்க் கிரங்கி - துன்பத்தை நுகருகின்ற
    வறியவருக்கு இரங்கி.
யாண்டுமெய் நன்னர் வாசக நவிற்றி - எப்பொழுதும்
    உண்மையான மாதுரியவசனங்களைக் கூறி.
ஆதரித்து - ஆதரவுசெய்து.
உன்னருங்குணத் துதவிசெய்திடும் - நினைத்தற்கரிய
    நற்குணத்தோடு உபகாரஞ் செய்கின்ற.
அந்நலாரெலாம் - அந்த நல்லவர்களெல்லாரும்.
அநலார்களே - அத்திருநாட்டில் வாசஞ்செய்யும்
    உத்தமகுணப் பெண்டிர்கள்தான். எ - று.
 
   
25. மாரிசம் களை மா தவத்தரும் - கள்ளமில்லாத மனஸோடு
    பக்தி செய்கின்ற திருத்தொண்டரும்.
நாரி சங்கமும் - மாதர் கூட்டமும்.
நண்ணி அங்கு இருபாரிசங்களும்
- (ஜீவவூற்றண்டை)
அடுத்து
    இருகரை மருங்கும்.
படியுங்கால் - படியும்போது.
முகவாரிசம் குலாம்
- (அவர்கள்) முகபத்மங்கள்
    விளங்கிய.
வாரிசங்கமே
- ஜீவ நீர்நிலைகள் (அந்நாட்டில்)
சங்கமென்று
    சொல்லத்தக்கனவாயிருக்கும். எ - று.
    'படியுங்கால்' என்பதை நீர்நிலையில் நீராடுதலாகவும்,
    தேவாலயத்தில் வணங்குதலாகவும் கொள்க.
 
   
26. திருமலிந்த மங்கையர் சிறாரொடும் - வைதீகநலங் கதித்த
    பெண்டிரோடும் பிள்ளைகளோடும்.
மைந்தர்தாம் - புருஷரானவர்கள்.
மருமலிந்த பூம்பொழிலின் - புஷ்பவாசனை பரிமளிக்கின்ற     சோலையினிடத்து (நற்கிரியை பரிமளிக்கின்ற
    குக்கிராமங்களில் என்றபடி.)