பக்கம் எண் :

290

                             இரக்ஷணிய யாத்திரிகம்

                              இரண்டாம் பாகம்

மூன்றாவது: நிதானபருவம்
 

வனம்புகு படலம்
 

 
 

வித்தக யூகி யுய்த்தமெய் யுணர்ச்சி
     விவேகிமா துரைத்தநற் புத்தி
மித்திரை வளர்த்த சிரத்தைமெய்ப் பக்தி
     விளங்கிழை புகட்டிய மேலாம்
உத்தம தேவ பத்தியென் றினைய
     வுசிதநற் குணங்களே துணையா
முத்திமார்க் கத்து நெறிபிச காமே
     முன்னுற முடுகின னிவிர்த்தன்.          1

 
  நெறிசெலச் செல்ல நெருக்கமும் வழுக்கு
     நேரிய விறக்கமு நெறியின்
குறிமருண் டயலோர் சற்றடி பிசகிற்
     குணிப்பரு மோசமு முளவென்
றறிவனுள் ளழுங்கி யவசமுற் றனன்மற்
     றாயினு மகவயி ராக்யப்
பொறிவரி வைரத் தண்டுகொண் டூன்றிப்
     போகவுங் கூடுமென் றுரைத்தான்.       2
   
  மிடுக்குறும் பரிய கோல்பிடித் தூன்றி
     மிதித்துநின் றுரத்தடி பெயர்த்தும்
நடுக்குறு மமையத் தருளுறப் பலத்து
     நன்மையை நனிகடைப் பிடித்தும்
இடுக்குறும் ஜீவ பாதையி னிறக்கத்
     தினைவொடு மென்மெல விறங்கி
அடுக்கலி னடிவா ரத்துவந் தணைந்தா
     னறவருக் கரிதியா வதுவே.            3