பக்கம் எண் :

291

  சஞ்சல மலையைத் தாண்டிவந் திப்பாற்
     சாரலிற் றாழ்மையென் றொருபேர்
விஞ்சிய பள்ளத் தாக்கினை யெதிர்ந்தான்
     மேதகு கிறிஸ்தவ னெவர்க்குஞ்
செஞ்செவே நெடுநாட் பல்பெருந் துன்ப
     நுகர்ந்துபின் சிந்தனை திருந்தி
வஞ்சமில் தாழ்மை வரப்பெறு மிதுவே
     வாரிசூழ் வையகத் தியற்கை  
4
   

                   வேறு
  சீரிய தாழ்மையென் றுரைக்குஞ் செவ்விய
பேரியற் படுகரின் பெற்றி நோக்குறின்
ஆரிய ராயமெய் யறிஞ ரேயலாற்
பூரியர் யாவரும் புகப்பெ றாதது.  
5
   
  அண்ணலார் கருணையாற் றணிகொ டீரத்துத்
தண்ணளி நறுநிழல் படர்ந்த சார்பது
புண்ணியப் போனக மமைந்த பொற்பது
நண்ணரு மிகபர நலம்ப யப்பது.  

6

   

  கன்மனத் தூறுநீர்க் கான்சு னைத்தது
பொன்முக மரைமலர் பொலியும் பொற்பது
நன்மொழி நறைகமழ் நந்த னத்தது
தன்மமாக் கனிதருந் தருக்கள் சான்றது.  

7

   
  கோதறு குணவளங் குலவு மாயினும்
மாதரை மானிடம் வரையத் தக்கது
மேதகு நற்பயன் விளைக்கு மாயினுஞ்
சாதக மாவதற் கருமை சான்றது.  
8
   
  இத்தகு வழிப்படு மெம்ம னோர்க்கெலாஞ்
சத்துரு பயங்கரந் தவிர்க்குங் கோட்பது
வித்தக கிறிஸ்துவின் விமலச் சேவடி
உத்தம சுவடுநன் கொளிரப் பெற்றது.  

9

   
  வலமிட மறிகிலா வச்சை மானிடம்
நலமிலா திகழ்புகழ் நாடு கில்லது
குலநறுங் குணமலர் குழுமி யெண்டிசைப்
புலமெலாம் பரிமளம் பொலியும் பொற்பது.

10