|
மேதகு
மெய்மனத் தாழ்மை மேவிய
சாதுமார்க் கத்தவர் தடங்கு லாயது
பேதையர் பலபடப் பிதற்று நிந்தையாம்
வேதனை கூர்த்தமுள் விரவுங் கோட்பது. |
11 |
|
|
|
|
மின்னெனப்
புகையென வீயுந் தேகருக்
கென்னொரு பெருமையென் றெறியு நீரது
பன்னருந் தாழ்வுறு படுக ராயினும்
உன்னத பதவிபுக் கொடுங்கு மீட்டது. |
12 |
|
|
|
|
பலந்திக
ழினையதோர் படுகர் வைப்பினை
வலந்திகழ் வேதிய னடைந்து வான்படர்
நலந்திகழ் கருத்தொடு நயந்து மெய்ம்மறைப்
புலந்திகழ் நெறிக்கொடு போயி னானரோ. |
13 |
|
|
|
|
வனம்புகு
படலம் முற்றிற்று. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
முற்படச்
செலுநெறி முறையை நன்கறி
விற்பன நிதானியைச் சேரும் வேட்கையாற்
பற்பல யோசனை படுகர் வைப்பினிற்
பிற்பட விரைந்தனன் பின்றொ டர்ந்தரோ. |
1 |
|
|
|
|
ஆயிடைத்
தமியனா யருள்வ ழிச்செலுந்
தூயவ னெஞ்சகந் துணுக்குற் றேங்கிடக்
காயுரு மிடித்தெனக் கதித்தொர் பேரொலி
ஏயெனு மாத்திரத் தெழுந்த தெஞ்சவே. |
2 |
|
|
|
|
பேரொலி
முழக்கினாற் பேதுற் றுள்ளுடைந்
தாரிய னடிபிச காது நின்றிவண்
மாரியின் றாகவச் சுறுத்த வந்தவிக்
காரியம் யாதெனக் கருதுங் காலையில். |
3 |
|
|
|
|
நஞ்சமு
மவித்தையு மிருளு நாசமும்
வஞ்சமுங் கொடுமையு மறமுந் தீமையுஞ்
செஞ்செவே திரண்டுருத் தெரிய நின்றிடும்
அஞ்சனக் கருநிறத் தவுண யாக்கையன். |
4
|