|
பேயுமஞ்
சுறுபெரும் பேய்மு கத்தினன்
காயெரி பங்கியன் கடுத்து றுங்கொடு
வாயினன் வக்கிர தந்தன் வன்கணன்
தீயெழு புகையென வுயிர்க்குந் தீயவன். |
5 |
|
|
|
|
உருக்கிய
லுலம்பொரூஉ முரங்கொ டோளினன்
செருக்கொடுங் காத்தட மார்பன் றிண்ணியன்
வெருக்கொளத் தடித்தெழு மெய்யன் வெவ்விய
தருக்குறு மிருசிறை தழைத்த சார்பினன்
|
6 |
|
|
|
|
.முடங்குளை
யரியின்மும் மடங்கு மொய்ம்புளான்
கடங்கலுழ் கறையடிக் காலன் காழ்படும்
இடங்களிற் செதிளுறு மிருப்பு மேனியன்
விடங்கவி ழரவெனச் சீற்ற மிக்குளான். |
7 |
|
|
|
|
பின்னிடு
பார்ப்பனப் பிணங்க ளின்குறி
மன்னுவெண் டலைப்புழை மலிந்த மாலையன்
பன்னரு மவகுணப் படைக்க லத்தினான்
உன்னிய வுருவெடுத் துழலுங் கூற்றனான். |
8 |
|
|
|
|
பாபத்தை
மணந்தவன் பழியைப் பெற்றவன்
சாபத்தைப் படைத்தவன் றரும நாயகன்
கோபத்தை யடைந்தவன் குவல யத்தினுக்
காபத்தை விளைப்பவ னறத்தைத் தின்பவன். |
9 |
|
|
|
|
உயக்கொளு
நெறிவரு வோரை யொண்மதி
மயக்கிவன் சிறையிடைப் படுத்தும் வஞ்சகன்
வயக்குரு சுயர்த்தவிம் மானு வேல்பதம்
நயக்குநர் யாவர்க்கு நாச கண்டகன். |
10 |
|
|
|
|
இப்படு
பாதக னழிம்ப னென்பவன்
மெய்ப்படு கிறிஸ்தவன் விழிக்கு நேரெதிர்
கைப்படக் காண்டலுங் கலங்கி யுள்ளழிந்
தெப்படி யெனக்கினி யுய்வென் றெண்ணுவான். |
11 |
|
|
|
|
முன்னெதி
ரூன்றிட முரணின் றென்னயான்
பின்னிடு வேனெனிற் பிழைப்பின் றாலிவன்
வெந்நிடைச் சுடுசரந் துரந்து வீட்டுவன்
மன்னர்கோ னன்றியை மறந்த கேடுமாம். |
12 |