பக்கம் எண் :

294

போர்த்தொழிற் சேவகம் புரிவன் யானெனத்
தீர்த்தனுக் குடம்படி செய்திந் நாள்வரை
ஆர்த்தியிற் றருமுண வருந்தி வந்திவண்
பேர்த்தடி பிறழ்வது பெருந்து ரோகமால்.
13
 

எனைப்பகைத் தானல னிவன்மற் றெம்பிரான்
தனைப்பகைத் தானெனச் சான்றுண் டாதலின்
முனைப்பகை முருக்கிட முரண்டந் தேழையேன்
வினைப்பகை தொலைப்பதும் வேந்தன் பாலதரல்.

14
 

அஞ்சியான் பின்னிட லழகன் றாருயிர்
துன்சினு மரசற்குத் துரோகி யாகலன்
நெஞ்சுற வெதிர்த்துமுன் னிற்ப தேநலன்
என்சுறே னெனவுரத் தெதிரிட் டானரோ.

15
 
உங்கரித் தமிம்பன்வந் துருத்து நோக்கிநின்
றெங்குளை யெங்குசெல் கிற்றி யாரை நீ
நுங்குமுன் புலப்பட நுவறி நொய்தென்றான்
கங்குலும் பகல்படக் கருகு நெஞ்சினான்.
16
 
விளக்கொளி வரவிருள் விலகு மாறுபோல் இளக்கநெஞ் சேழைமை யபல மென்றின துளக்கற வருட்பலந் துன்னி வேதியன் உளக்களிப் பொடுதுணிந் துரைத்தன் மேயினான். 17
 
நாசதே சத்துளே னாச தேசத்தில்
நீசவெவ் வினைகுடி நிலவிற் றாதலின்
மோசமு நாசமு முடுகு மென்றமெய்
வாசகங் கேட்டதை வரைந்து வீசினேன்.
18
 
வீவினை விரும்பிடா விட்பு லத்துயர்
கோவினுக் கேயடித் தொழும்பு கூடினேன்
சாவினை விளைக்கவென் முதுகிற் றங்கிய
தீவினைச் சும்மையுந் தெறித்து வீழ்ந்ததால்.
19
 
நித்திய மங்கள நிகழ்சு கானந்த
முத்திமா நகர்செல முடுகு கின்றனன்
எத்திற நுங்கருத் திராஜ பாதையின்
மத்தியில் யானுளன் மனக்கொ ணீயென்றான்.
20