|
நன்றுநன்
றுன்னிலை நாச தேசமுந்
துன்றிய குடிகளுஞ் சொந்த மாமெனக்
கென்றறி நீயுமென் றொழும்ப னின்றெனிற்
கொன்றுயிர் குடிப்பனீ துளத்துக் கோடியால். |
21 |
|
|
|
|
கரைசெயற்
கரியவென் காமி யச்சுவை
திரைசெய்தெண் கடற்புவிக் கருத்து தெய்வமும்
அரசனு மாமெனை யறிய கிற்கிலாய்
விரசுவ தென்னிவண் மீளு வாயென்றான். |
22 |
|
|
|
|
கொல்வது
முருத்துளங் கொதித்துப் பொங்கிமேல்
வெல்வது மிருக்கவோர் பக்கம் வேறு நீ
சொல்வது மெய்யெனைத் தொழும்பு கொண்டனை
செல்வதோ விளந்தையிற் றீட்டு சாசனம். |
23 |
|
|
|
|
உள்ளநாண்
முழுவதும் மொழிவின் றூழியங்
கொள்ளுவை நல்குபுன் கூலி கொண்டெவன்
பள்ளநீ ருலகினின் றுய்வன் பாவத்துக்
கெள்ளரு நித்திய மரண மேயுமால். |
24 |
|
|
|
|
தீமையிற்
றிருந்துமுன் றேச வாழ்க்கையின்
காமியச் சுவைநலங் காட்டு மேகொலாம்
வேமெரிக் கிடையிடை விறகிட் டென்னவே
மீமகீ பதிசினம் விளைப்ப தேயலால். |
25 |
|
|
|
|
செப்பருந்
தனிமுதல் திருவ டிக்கியான்
ஒப்படை யாய்த்தொழும் புஞற்ற நேர்ந்தனன்
எப்பெரு மிடரெனக் கிறுதி சூழினுந்
தப்புமார்க் கத்தடி சறுக்கி வீழ்கிலேன். |
26 |
|
|
|
|
வீழினும்
பிடித்தகை விடுக்கி லார்பகை
சூழினு முன்னின்று துணிப்பர் ஸ்வர்க்கத்து
வாழிய நலந்தரு வள்ள லாருக்கே
ஊழியஞ் செய்துய வொருப்பட் டேனென்றான். |
27 |
|
|
|
|
நிண்ணயம்
வேதிய னிகழ்த்தக் கேட்டலுங்
கண்ணழல் கதுவிடக் கனன்று காரிருள்
வண்ணனு மெனையொரு மசகீ மாகவும்
எண்ணலை போலுநீ யெனவி யம்புவான்.
|
28 |