பக்கம் எண் :

296

வாழுநன் மதியுனக் கில்லை வாழ்வொடு
சூழுமிவ் வுடற்சுகந் துய்க்க நச்சிலை
ஊழிவெந் தீவிழுந் துடற்று மென்றசொற்
கேழைநீ யிடைந்திடர்க் கடற்குள் ளெய்தினாய்.

29
 
செய்தவ றணுத்துணை சிமையத் தண்டனை
செய்திடு நலமெலாஞ் சிறிது மின்றெனச்
செய்தருள் வசத்தினால் ஜீவ ரக்ஷைவந்
தெய்துமென் றிசைப்பதே யீசு ராதிக்கம்.
30
 
உன்னத புனிதமா மொண்ணெ ருப்பினைப்
புன்னர கீடங்கள் பொருந்த லாவதோ
முன்னமெத் தனையவர் முரணி முற்றும்விட்
டென்னர சியன்முறை யுவந்திங் கெய்தினார்.
31
 
மருண்டுமற் கடப்பிடி வாத மாய்ச்சிலர்
தெருண்டில ரென்மொழி செகுக்கப் பட்டனர்
உருண்டநே மியினர சுய்க்கு மாண்டகை
இருண்டபுன் மனத்தரை யிரஷி யாததென்.
32
 

பொய்வழி யுழன்றுநீ புரிந்த போகவிம்
மெய்வழி பிடித்தபின் னொதியில் வீழ்ந்தனை
உய்வழி பிறிதெனு முரைகொண் டேகினை
மைவழி வெருண்டுபின் வாங்க வெண்ணினை.

33
 
மற்றுநின் புகழ்ச்சியை விரும்பி வந்தனை
இற்றைமட் டெண்ணினீ யியற்று தீமைகள்
முற்றறி கடவுளின் முறைமைக் கேற்பவோ
எற்றவா மிரக்ஷணை விழைத லேழைநீ.
34
 

தஞ்சமென் றெனையடைந் தவர்க்குச் சாவுமட்
டெஞ்சுறாத் துன்பம்வந் தியையு மாயினும்
வஞ்சனை யானும்பொய் வாய்மை யானுமிங்
குஞ்சிடப் பலவகை யுறுதி சூழ்வனால்.

35
 
ஈட்டிய நன்றுதீ தெதையு நாடலேன்
கோட்டமி லென்னுரை குறித்து நின்றிடின்
வேட்டவர் வேட்டசிற் றின்பம் வேண்டுமட்
டூட்டலென் னரசியன் முறையென் றோர்தியால்.
36