|
பொற்புறு
நாசதே சத்துப் போந்துநீ
அற்புத வளநுகர்ந் தாயு ணாளெலாம்
முற்படு காமிய முழுதுந் துய்த்திரு
பிற்படு கதிநினைந் திரங்கிப் பேதுறேல். |
37 |
|
|
|
|
இணங்குவா
யெனிலிக சுகத்தை யீகுவல்
பிணங்குவா யெனிலுயிர் பிழிந்து தேக்குவல்
உணங்கியோ யெதுதுணி புரைத்தி யென்றனன்
நிணங்கெழு குருதிவே னிசாச ரேசனே. |
38 |
|
|
|
|
நஞ்சினிற்
றீயினி னடுக்கங் காட்டிய
வஞ்சகப் பேய்மகன் பிதற்றும் வாய்மொழி
அஞ்செவி புகப்புக வகத்தி னுள்ளுற
விஞ்சிய தருட்பலம் வேதி யற்கரோ. |
39 |
|
|
|
|
வேறு. |
|
|
தைவிகவ நுக்கிரக சத்தியினு ரங்கொண்
டுய்வழியொ ழுக்கம்வில காதெதிரி லூன்றி
மைவருநி சாசரம னக்கொளிது வென்னா
மெய்வருத வச்சுருதி வித்தகன்வி ரிப்பான். |
40 |
|
|
|
|
சித்தமுற
நன்கறிவ னீயெனது ஜென்ம
சத்துருவெ னக்குதவு சார்புரிமை வாழ்வென்
றத்தனையு நித்தியவ னர்த்தமெனு மாற்றால்
இத்தகைய நூனெறிபி டித்திவணி றுத்தேன்.
|
41
|
|
|
|
|
மாயமுறு
மின்பநலம் வாழ்வுசுக மாதி
ஆயவைத ரத்துணிதி யம்மவழ கிற்றால்
மேயமனை தோறுமெறி மிச்சில்விழை நாய்கொல்
சீயமுடி பெற்றரசு செய்யும்வகை செய்யும். |
42 |
|
|
|
|
கொடுமதிப
டைத்துலவு கோழைநர மல்லால்
நடுமதிப டைத்தவருன் னச்சுமதி கொள்ளார்
அடுமதிப டைத்திழிய ழிம்பவழி வெய்துங்
கெடுமதிப டைத்தனைகெ டாப்பழிப டைத்தோய். |
43 |
|
|
|
|
விள்ளரிய
பாதகவி னைச்சுமைவி ழுத்த
வள்ளலருள் சிற்சுருதி வாய்மைமதி யொன்றே
கொள்ளுவல்பு றத்துமதி கொள்ளமன முள்ளேன்
தெள்ளமுது குத்துவிட முண்பதுகொல் சீர்மை. |
44 |