பக்கம் எண் :

298

  மேதகைய தொண்டரைவி ரோதிகள்செ குக்கும்
போதிறைகை விட்டனரெ னாப்புகறி பொங்குங்
காதலினி கத்திடர்க ளைந்துகதி யுய்க்கும்
மாதயையின் மாட்சியென வெண்ணுகிலை மாற்றோய்.
45
     
  மார்க்கவயி ராகருடல் வார்குருதி யென்றும்
பார்க்கணுல வாக்கரிப கர்ந்திடலின் மேலாஞ்
சீர்க்கதியின் மேயபர சிற்சுகம்வி ளங்கித்
தீர்க்கமுறு மென்பதும் கேசபதி சித்தம்.
46
     
 

பாவநர ஜீவவதிர ணம்பரம ராஜன்
கோவவனல் பற்றியெரி யாவகைகு றித்தே
ஆவிவளி வீசியரு ளாழியின்ம டுக்கும்
ஜீவநதி யுய்க்கவினை தீர்ந்துகதி சேரும்.

47
     
  கேட்டியுன நாட்டிடைகெ ழீஇயபல வீனக்
கோட்டிமக வாயெனைவ ளர்த்தனள்கு யப்பால்
ஊட்டிநனி யாதலினு ஞற்றுபல தீமை ஏட்டினில
டங்குகில வெண்ணிமுடி யாவால்.
48
     
  எண்ணரிய தீவினையி யற்றியுள னேனும்
நண்ணியம னத்துயரு நாடுபெறு மூச்சுங்
கண்ணருவி நீர்சொரிக ருத்துநனி கண்டு
புண்ணியர்பொ ருத்தருள ளிக்கமகிழ் பூத்தேன்.
49
     
  இம்மகிழ்வ ளித்தெனையீ டேற்றுசரு வேசன்
செம்மலொரு நட்பிடைதி ரிக்கமுயல் கிற்றி
அம்மகெடு வாய்முடிவ தாங்கொலிஃ துன்னால்
மும்மையுல குக்கெனினு மொய்ம்பிலது காண்டி.
50
     
  மற்றினியு ரைப்பதெவன் வந்தவழி யின்னே
பற்றுதிய ணுத்துணைப யன்படுத லில்லாச்
செற்றமொடெ திர்ந்தமர்செ யத்துணிதி யாயின்
வெற்றிபெறு வாயலைவி ரைந்திடுதி யென்றான்.
51
     
  செய்யமறை யோனுரைசெ விப்படவ ழிம்பன்
நெய்யுறும ழற்சிகையெ னாச்சினநி மிர்ந்து
கையொடுகை யெற்றியிரு கண்குருதி காட்ட
வெய்யவுரு மேறெனவெ டித்தநகை செய்தே.
52