பக்கம் எண் :

299

  முத்தியர சற்குமவர் மொய்ம்பின்மகி மைக்கும்
நித்தவர சாட்சிமுறை மைக்குநெறி நிற்கும்
பத்தஜன ருக்குமதி கேடுகள்ப டுக்குஞ்
சத்துருவெ னக்கெதிர்த ருக்குளைகொ லாநீ.
53
     
 

நீதியர சன்கொலைநி னைத்துமில வாயிப்
பூதலமெ லாமெமது புத்துரையி னிற்ப
ஆதிமுத லாயுலக டக்கியர சாள்வேம்
பேதையொரு நீதனிபி ணங்கிலட ரேங்கொல்.

54
     
 

அடாசிறிய பையல்மச கத்துணையு மல்லாய்
கெடாமுதல ருட்டுணைகி டைக்குமென நம்பிக்
கடாசலமொ டேயமர்க லக்கவரு கின்றாய்
படாதுபடு வாயொருக ணத்திலது பார்த்தி.

55
     
  என்றெயிற துக்கியட வெங்ககறி யென்னாக்
கொன்றுயிர்கு டிக்கவரு கூற்றெனம றித்துக்
குன்றெனநி மிர்ந்ததிர டோண்முரடு கொட்டி
வன்றிறல்கொள் வெங்கதம டங்கலென வார்த்தான்.
56
     
  ஆர்த்துரறி நின்றனன டித்துணைகண் மாறிப்
பேர்த்தனன்வி ரைந்துபல சாரிபெயர் பெட்பிற்
பார்த்திடர்பி திர்ந்தனப ரந்தபடு தூளி
போர்த்தனவி சும்பிரவி பொங்குகதிர் நுங்கி.
57
     
  மறங்கிளரும் வன்சிறக டித்துயர வாவிக்
கறங்கெனவு ழன்றுகக னத்திடைக ரப்பன்
இறங்குவனி லங்கிழிய வெட்டியடி கிட்டி
அறங்கிளரு நெஞ்சனைய டுப்பனறை கூவி.
58
     
  வாவெனவி ளிப்பன்முளை வாய்மிடறு காறித்
தூவெனவு மிழ்ந்துபழி தூற்றியிகழ் வன்மெய்த்
தேவெனநி னைக்கவொரு ஜெந்துமில வென்னாப்
பூவுலகை யின்றொடுபு துக்கிடுவ னென்பான்.
59
     
  செத்தபிண நுங்குகழு கிற்சிதட மார்க்கப்
பித்துறுபி ணங்களைநு கர்ந்துழல்பி சாசன்
இத்திறம நேகவித கோரணியி யற்றி
வித்தகனொ டேயமர்வி ளைத்திடுவ தானான்.
60