|
ஆத்துமவி
சாரியும் ருட்கடவுள் வேந்தன்
மாத்தகைய சேவடிம னத்திடையி ருத்தித்
தீத்தொழில ரக்கனுயிர் சிந்தவதிர் தும்பைப்
பூத்தொடைபு னைந்தமர்பு ரிந்திடுவ தானான். |
61 |
|
|
|
|
நன்மைபர
ஞானமொளி நல்லறமி வற்றைத்
தின்மையறி யாமையிருள் தீமறம டர்த்து
வன்மைமிகு வெஞ்சமம லைத்திடுதல் போலாந்
தொன்மறைவ லானொடுப சாசமர்தொ டுத்தல். |
62 |
|
|
|
|
ஆயிடைநி
சாசரன றக்கொடுமை பூண்ட
மாயமுறு வெஞ்சிலைவ ளைத்துமற மல்குங்
காயெரிமு கத்தனக டுத்துறுநு னித்த
சாயகச தம்பலத ருக்கொடுவி டுத்தான். |
63 |
|
|
|
|
மற்றிணித
டம்புயம றைக்கிழவன் வல்லே
செற்றமொட ரக்கன்விடு தீப்பகழி தீந்து
முற்றுமவை யிற்றுகமு ரண்கொள்விசு வாசப்
பற்றெனுமி ரும்பரிசை யாற்பொடிப டுத்தான். |
64 |
|
|
|
|
தாக்கியவ
ழற்பகழி சாம்பருறல் கண்டே
மீக்கிளர்சி னத்தவுணன் வெய்யவசை யென்னுந்
தீக்கிளர்ச கத்திரசி லீமுகம்வி டுத்தான்
காக்குதிகொ லோவறிவ லென்றொருக ணத்தில். |
65 |
|
|
|
|
அங்கவைவி
சைத்தணுகி யாத்துமவி சாரன்
செங்கையுறு கேடகம றிந்திடைசி தைந்து
பங்கமுற லாயினப ழிப்பிலற வோர்பால்
வெங்கணவர் சூழ்வினைவி ளிந்தொழியு மாபோல். |
66 |
|
|
|
|
நன்முறையொ
ரீஇயகெடு தோஷிநனி பொங்கித்
தொன்முறைவ டிக்கணைக ணிப்பிலது ரப்பப்
பன்முறையு நுண்டுகள்ப டப்பரிசை கொண்டே
சொன்முறைய றிந்தவனெ திர்ந்தவைதொ லைத்தான். |
67 |
|
|
|
|
வேறு |
|
|
விஞ்சவி டுத்த நஞ்சுகு வெங்கோல் விறலின்றி
எஞ்சுதல் கண்டே நெஞ்சழி வுற்றங் கிகல்வெய்யோன்
பஞ்சமு னிற்காய் செஞ்சிலை பற்றாய் பரிசைக்குள்
அஞ்சியொ ளிப்பாய் வெஞ்சம ருக்கீ தறமேயோ. |
68 |